Posts

கொல்லவார் கண்ணன்

Image
கொல்லவார் கவிதை             ======================== கொல்ல குல தந்தையே உலகின்  குறைவில்லா சிந்தையே !  கள்ளமில்லா குலத்தின் காவலனே உலகின்    உள்ளமெல்லாம் இருப்பவனே !  எம் குல வேந்தனே கொல்லவாருக்கு  தீங்கிழைத்த கம்சனை   கொல்ல  வந்தோனே,  எம் குல வேந்தனே ! மதுராபுரி ஆண்டவனே அழகர் மலையில் வாழ்பவனே எம் குல வேந்தனே ! அதர்மம் அழிக்க தர்மத்தின்  துணை நின்றோனே எம் குல வேந்தனே ! கீதை தந்த கீத கோவிந்தமே ! எம் குல வேந்தனே ! பேய் மழை இலிருந்து கொல்லவார் ஐ  கோவர்த்தன மலை ஏந்தி காத்தோனே,  எம் குல வேந்தனே !  அவதாரம் பல எடுத்து உலகத்தின் அழிவை காத்தோனே!  எம் குல வேந்தனே !  -உன் போல் சொல்ல யாருமில்லை கொல்லவாருக்கு நீதான் எல்லை !

மாம்பாறை பாளையக்காரர்

Image
மாம்பரை பாளையப்பட்டு வரலாறு:- கீழ்க்காணும் தகவல்கள் மாம்பரை பளையப்பட்டு வம்சாவழி குறித்த அரசு ஆவணத்தில் இருந்து எளிமைப்படுத்தி எழுதப்பட்டது. மாம்பரை பாளையத்தின் முன்னோர் சகரம் தம்மைய நாயக்கர் வரலாறு:- மாம்பரை பாளையப்பட்டின் வம்சாவழி முன்னோரான சகரம் தம்மைய நாயக்கர் விஜயநகர ராயர் ராஜ்ஜியத்தில் கொட்டியம் நாகம நாயக்கருக்கு சேவகம் செய்துக்கொண்டிருந்தார். அப்போது நாகம நாயக்கருக்கு வெகு நாட்களாய் குழந்தை பாக்கியம் இல்லாததால் காசிக்கு சென்று கங்கையில் நீராட புறப்பட்ட போது தம்மைய நாயக்கரும் அவருடன் உடன் சென்றார். காசியை அடைந்த நேரத்தில் நாகம நாயக்கர் தம்மைய நாயக்கரிடம் நான் இப்போது கங்கையில் நீராடச்செல்கிறேன் அதுவரை நீ கரையின் மீதிருந்து மிக கவனமாக காவல் காத்துக்கொண்டிரு என உத்தரவிட்டார். அவ்வாறே நம்மைய நாயக்கரும் காவல்காத்தார். கங்கா ஸ்நானத்திற்கு பிறகு நாகமர் தவத்தில் ஆழ்ந்தார் இவ்வாறாக பல நாட்கள் காசியில் இருந்த வேளையில் ஒரு நாள் இரவு நாகம நாயக்கர் கனவில் தோன்றிய காசி விஸ்வநாதர் குழந்தை பிறக்கும் வருத்தமடைய வேண்டாம் என கூறி மறைந்தார். ஈசன் வாக்கால் மகிழ...

நாயக்கர் செப்பேடுகள்

Image

நெகம் பாளையக்காரர்

Image
சின்ன நெகமத்தில் பாளையக்காரர்  கல்வெட்டு  பாளையக்காரர்கள் – ஒரு முன்னுரை          விசயநகரப்பேரரசின் தோற்றம்          கி.பி. 1336-ஆம் ஆண்டில் இந்தியாவின் தென்பகுதியில் விசயநகரப் பேரரசு உருவானது. பின்னர் கி.பி. 1378-இல், விசயநகர அரசின் இளவரசரான குமார கம்பணன் மதுரையை வெற்றிகொண்டார். தொடர்ந்து தமிழகம், கேரளம் ஆகிய இரண்டும் விசயநகர ஆட்சியின்கீழ் வந்தன. விசயநகர அரசு பல நிருவாகப் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டன. தமிழகத்தில் இந்த ஆட்சிப்பிரிவுகளுக்குத் தலைவர்களாக மண்டலாதிபதிகள் நியமிக்கப்பட்டார்கள். இவர்களுக்குத் தனியே படையும் உண்டு. பின்னர், 15-ஆம் நூற்றாண்டின் இறுதிப் பத்தாண்டுகளில் “நாயக்கர்கள் ”   என்னும் படைதலைவர்களின் உருவாக்கம் நிகழ்ந்தது.         கிருஷ்ணதேவராயரின்   நாயக்கத்தனம்        எனினும், நாயக்கர் உருவாக்கம் முழுமையான வடிவமும் சிறப்பான நிலையும் பெற்றது கிருஷ்ணதேவராயரின் காலத்தில்தான். அரசின் ஆட்சிப்பரப்பில் ஆங்காங்கே ...

பாலமுகாரு பூர்வீகம் முதுகல்

Image
பாலமுகாரு என்ற மக்கள் கொல்லவார் குலத்தில் உட்பிரிவாக வரலாற்றில் இடம் பெற்றுள்ளது. பாலமு என்றால் படை, இராணுவம் என்று பொருள். முதுகல் என்ற பகுதியில் கோட்டை கட்டி ஆட்சி செய்த கொல்லவார்கள் அதிக படை பலம் கொண்டு வாழ்ந்ததால் இவர்களுக்கு பாலமு பட்டம் வந்தது. பிற்காலத்தில் சாளுவ கட்டாரி பட்டமும் கிடைத்தது. பாமினி பேரரசு தேவகிரி கோட்டையை அழித்ததும் அவர்களின் கண் முழுவதும் முதுகல் கோட்டை மீது தான் இருந்தது. முதுகல் பாலமு கார்கள் படை பலம் மட்டும் அல்ல பெரிய செல்வ வளங்களோடு இருந்தனர். பாமினி அரசு இதை பிடித்து விட்டது.  இதை மீட்க சங்கம வம்சம் காலம் முதல் அரவீடு மரபு வரை தொடர்ந்து கொல்லவார்களுக்கும் பாமினி அரசுக்கும் பெரும் போர் நடைபெற்று கொண்டு பிடிப்பதும் விடுவதுமாக இருந்தனர். சாலுவ நரசிம்ம நாயக்கர் இராய்ச்சூரும், முதுகல்லையும் எப்படியாவது மீட்க வேண்டும் இது நமது குலத்தின் முக்கிய கோட்டைகள் என்று கூறி அதை மீட்க பெரும் சேதத்தை கொடுத்தும் மீட்டார் என்கிறது வரலாறு. #இதிலிருந்து தெரிவது கம்பளத்தார் மக்கள் பிரிவு ஒரு ஒரு பகுதியில் தனி தனி குழுவாக கோட்டை கட்டி இருந்ததை பார்க்க முடிகிறது. ...

இராணிமங்கம்மாள்

Image
மக​னையும் ​பேர​னையும் அரசராக்குதல் மங்கம்மாள் தனது மகன் அரங்க கிருஷ்ண முத்து வீரப்ப நாயக்கருக்கு சின்னமுத்தம்மாள் என்பவரைத் திருமணம் செய்து ​வைத்தார். அதன் பிறகு முத்து வீரப்ப நாயக்கருக்கு அரசுரி​மை அளித்து அரசராக்கினார். அன்​னையின் வழிகாட்ட​லோடு உதவியோடும் அரங்க கிருஷ்ண முத்து வீரப்ப நாயக்கர் திறமையாக ஆட்சி செய்தார். தனது தந்தை சொக்கநாத நாயக்கர் இழந்த பகுதிகள் சிலவற்றை போரிட்டு மீட்டார். முத்து வீரப்ப நாயக்கர் ஆட்சி செய்த போது, ஔரங்கசீப் என்ற மொகலாய மன்னர், தம் செருப்பை, நாடெங்கும் ஊர்வலமாக அனுப்பினார். அச்செருப்புக்கு அரசர்கள் எல்​லோரும் மரியாதை செய்ய வேண்டுமென்றும் அறிவிக்கப்பட்டது. ஆனால் வீரமிக்க முத்து வீரப்ப நாயக்கர் அந்தச் செருப்பைத் தன் காலில் அணிந்து கொண்டு, “உங்கள் மன்னர் இன்னொரு செருப்பை அனுப்பவில்லையா?” எனக் கேட்டார். இத்த​கைய வீரமிக்கவராக முத்து வீரப்ப நாயக்கர் திகழ்ந்தார். ஆனால் அது நி​லைக்கவில்​லை. ஏழாண்டு காலம் நல்வழியில் ஆட்சி செய்து வந்த அரங்க கிருஷ்ண முத்து வீரப்ப நாயக்கர் அம்மை நோயால் 1688-ஆம் ஆண்டில் காலமானார். கணவர் இறந்த சில நாள்களிலேயே ஆண் மகனைப் ப...

இராணிமங்கம்மாள்

Image
ராணி மங்கம்மால் சிலையும் கல்வெட்டும்  அவனியாபுரத்தின் கிழக்கே உள்ள வல்லானந்தபுரம் என்ற ஊரில் கி.பி 1693 ஆம் ஆண்டை சேர்ந்த கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது. இங்கு ஆனந்த அனுமார் கோவில் உள்ளது. இக்கோவில் அருகே சிதைந்த நிலையில் கோவிலின் அதிட்டான பகுதியில் உள்ள கல்வெட்டுகளில் வல்லப சதுர்வேதி மங்கலம் என்ற பிராமண ஊர் பெயரும்,வல்லப விண்ணகரம் என்ற பெருமாள் கோவில் பெயரும் இடம்பெற்றுள்ளது. இங்கு துர்க்கைக்கான கோயிலும், அதற்கான நிலகொடைகள் குறித்தும், பிரவுவரி திணைக் களத்து முக வெட்டி அதிகாரியின் பெயரும் இடம்பெற்றுள்ளது. இந்த கல்வெட்டை தேவன் பணையன் என்ற அண்டை நாட்டு தச்சன் செதிக்கியுள்ளதாகவும் இக்கல்வெட்டு கூறுகிறது. இக்கோவில் முன் உள்ள கல்வெட்டு தூணில் சங்கு, சக்கரம், நாமம் செதுக்கபட்டுள்ளன. இக்கோவிலை கட்டியது ராணி மங்கம்மாள் என்பதும் தெரியவருகிறது. இக்கோவிலின் பெயர் அனுமார் ஆழ்வார் என கல்வெட்டு மூலம் அறியமுடிகிறது. நண்பர் உதயகுமார் கண்டுபுடித்த ராணி மங்கம்மால் சிலை இக்கோவில் அருகில் அவரால் கட்டப்பட்ட அலங்கார பிள்ளையார் கோவில் தற்போது இல்லை. ராணி மங்கம்மாள் தனது முத்தியப்ப நாயக்கருக்கு புண்ணிய...