பாலமுகாரு பூர்வீகம் முதுகல்

பாலமுகாரு என்ற மக்கள் கொல்லவார் குலத்தில் உட்பிரிவாக வரலாற்றில் இடம் பெற்றுள்ளது.

பாலமு என்றால் படை, இராணுவம் என்று பொருள்.

முதுகல் என்ற பகுதியில் கோட்டை கட்டி ஆட்சி செய்த கொல்லவார்கள் அதிக படை பலம் கொண்டு வாழ்ந்ததால் இவர்களுக்கு பாலமு பட்டம் வந்தது. பிற்காலத்தில் சாளுவ கட்டாரி பட்டமும் கிடைத்தது.

பாமினி பேரரசு தேவகிரி கோட்டையை அழித்ததும் அவர்களின் கண் முழுவதும் முதுகல் கோட்டை மீது தான் இருந்தது.

முதுகல் பாலமு கார்கள் படை பலம் மட்டும் அல்ல பெரிய செல்வ வளங்களோடு இருந்தனர்.

பாமினி அரசு இதை பிடித்து விட்டது. 

இதை மீட்க சங்கம வம்சம் காலம் முதல் அரவீடு மரபு வரை தொடர்ந்து கொல்லவார்களுக்கும் பாமினி அரசுக்கும் பெரும் போர் நடைபெற்று கொண்டு பிடிப்பதும் விடுவதுமாக இருந்தனர்.

சாலுவ நரசிம்ம நாயக்கர் இராய்ச்சூரும், முதுகல்லையும் எப்படியாவது மீட்க வேண்டும் இது நமது குலத்தின் முக்கிய கோட்டைகள் என்று கூறி அதை மீட்க பெரும் சேதத்தை கொடுத்தும் மீட்டார் என்கிறது வரலாறு.

#இதிலிருந்து தெரிவது கம்பளத்தார் மக்கள் பிரிவு ஒரு ஒரு பகுதியில் தனி தனி குழுவாக கோட்டை கட்டி இருந்ததை பார்க்க முடிகிறது.
அதிக மாடுகளை வைத்து இருந்தால் குறுநில மன்னராக ஆகலாம் வடுக நாட்டில்.

Comments

Popular posts from this blog

மாம்பாறை பாளையக்காரர்

தாராபுரம் பாளையம் :6