தாராபுரம் பாளையம் :6
தேவநாயக்கர் பரம்பரை (கம்பளத்தார் வரலாறு):-
தாராபுரம் துக்குடி பொள்ளாச்சி தாலுகாவின் பாளையக்காரான தேவநாயக்கர் வம்சாவளியின் வரலாறு என்னவென்றால்.
முன்னொரு காலத்தில் வராகநாட்டில் கோபால வம்சமான கம்பள குலம் யாதவ கோத்திரத்தில் ஆதியில் உருவானது. முல்லை நிலம், முல்லை மாலை, வசவசங்கறடால், ஒற்றை கொம்பு, கூடாரம், ஆயகுளல் இதுமுதலான விருதுகள் உண்டு.
பிற்காலத்தில் துவாரகாபுரி பட்டணத்தை சேர்ந்த ஆயர்பாடியில் பட்டணத்தில் கம்பளத்தார் பிரசித்தி பெற்று வாழ்ந்து வந்தனர். இங்கு ஸ்ரீ கிருஷ்ணர்வளர்ந்த வீடுகள் கம்பளத்தாரின் வீடுகளாக இருந்தன. மேலும் கிருஷ்ணரிடம் இருந்து கம்பள குலத்திற்கு கருட கொடி, அனுமன் கொடி, சந்திர வட்ட குடை, தவள சக்கிரம் முதலிய பொருட்கள் கிடைத்தன.
இப்படி பெரும் புகழுமாக கம்பளத்தார்கள் ஆயர்பாடியில் வாழ்ந்த காலத்தில் ஆயர்பாடி பட்டிணத்தை சேர்ந்த கிருஷ்ண மதுரையில் தேவநாயக்கரும் அவர் மகன் செகதேவநாயக்கரும் பரம்பரை பரம்பரையாக பெரும் புகழோடு ஆண்டு வந்தனர்.
அக்காலத்தில் அஸ்தினாபுரத்தை பெரும் ராஜாதி ராஜர்கள் ஆண்டு வந்தனர் அவர்களது மேலாண்மையின் கீழ் தேவநாயக்கர் வம்சாவளிகள் கிருஷ்ண மதுரையை ஆண்டு வந்தார்கள்.
பின்னாளில் அஸ்தினாபுரம் டில்லி என பெயர்பெற்று துலுக்கர்கள் இராஜ்ஜியமாக மாறி பாதுஷ்ஷா ராஜ அதிகாரத்திற்கு வந்த நாளில் கிருஷ்ண மதுரையை பாலமவார் உட்பிரிவை சேர்ந்த தேவநாயக்கரின் வம்சாவளியான பாலம சித்தம நாயக்கர் ஆண்டுக்கொண்டிருந்த காலத்தில் அப்போது டில்லியின் அரசரான பாதுஷ்ஷா கம்பள சாதியினரை அழைத்து கம்பளத்தார் பெண்ணை தனக்கு திருமணம் செய்து வைக்கும் படி கேட்டார். ஆனால் துலுக்கனுக்கு பெண் தர கூடாத என்ற தீர்மானத்துடன் இருந்த கம்பளத்தார்கள் பெரும் குழுக்களாக டில்லியை விட்டு கிளம்பி வரும் நேரத்தில் பாதுஷ்ஷாவின் படைகள் கம்பத்தாரை பின் தொடர்ந்து வந்து யுத்தம் செய்தனர். கம்பள மக்கள் ஆணைகுந்தி பிரதேசத்தை நோக்கி வரும் வழியில் கொண்டகீ நதி குறுக்கிட்டு ஆக்ரோஷமாக ஓடிக்கொண்டிந்தது. கவலை அடைந்த கம்பளத்தார்கள் தங்களின் குல தெய்வமான கிருஷ்ணரையும், தங்களின் பொம்ம தேவதையையும் பிராத்தனை செய்தனர் இதனால் அங்கு இருந்த மரங்கள் ஒன்றுப்பட்டு ஆற்றின் குறுக்கே பெரும் பாலமாக விழுந்தது. கம்பள மக்கள் இறைவனுக்கு நன்றி செலுத்திவிட்டு பெரும் கூட்டமாக அந்த பாலத்தின் மீது ஏறி ஆற்றை கடந்து மறுக்கரையை அடைந்தவுடனே கம்பள மக்களுக்கு பாலாமாய் இருந்த அந்த மரங்கள் பாதுஷ்ஷா படைகள் வந்தவுடனே மரங்கள் தானாகவே முறிந்து பாலத்தை சிதைத்தது இதனால் அக்கரைக்கு செல்ல முடியாத பாதுஷ்ஷா படைகள் பெருத்த ஏமாற்றத்துடன் வந்த வழியே திரும்பிச் சென்றனர்.
கம்பளத்தார் விஜயநகரம் வருதல்:-
துலுக்கர்களிடம் இருந்து இறையருளால் தப்பிய கம்பளத்தார்கள் ராயர் சமஸ்தானத்திற்கு உட்பட்ட ஆணைகுந்தி வந்தடைந்தனர். அப்போது விஜயநகரத்தின் கொல்லவார் அரசராக இருந்த புக்கராயர் கம்பள இன மக்கள் விஜயநகரம் வந்த செய்தியை அறிந்து அந்த இனக்குழுவில் இருந்த பாலால சித்தம நாயக்கரையும், சல்லிக்குச்சி பொம்ம நாயக்கரையும் அரசவைக்கு அழைத்து வரும்படி உத்தரவிட்டார். இவர்கள் இருவரும் ராயரிடம் தாங்கள் வந்த காரணத்தையும் கதையும் தெரிவித்தனர். இதன்விளைவாக ராயர் கம்பள இனமக்கள் விஜயநகரத்திலேயே தங்கிக்கொள்ளலாம் என ஆணை செய்தார். பின்னாளில் விஜநகருக்கு பணிந்த சிற்றரசர்கள் கலகம் செய்துக்கொண்டிருந்தனர் அப்போது ராயர் பாலால சித்தம நாயக்கரையும் அவரின் மச்சனர் சல்லிக்குச்சி பொம்ம நாயக்கரையும் அழைத்து கலகத்தை ஒடுக்கும் படியும் அவ்வாறு ஒடுக்கினால் தனது அரசவையில் அவர்களை குமார வர்க்கமாக சேர்த்துக்கொள்வதாகவும் வாக்களித்தார். எனவே பாலால சித்தம நாயக்கரும், சல்லிக்குச்சி பொம்ம நாயக்கரும் தங்களது கம்பளத்தார் படைகளுடன் சென்று கலகத்தை ஒடுக்கி அடக்கினர் இச்செய்தி ராயரை சென்றடைந்ததால் மகிழ்ச்சி அடைந்த
ராயர் அவர் இருவரையும் குமார வர்க்கமாக நியமித்தார்.
ஒருமுறை ராயர் சமஸ்தானத்தின் மீது பாதுஷ்ஷா படையெடுத்து வந்தபோது அவர்களை பாலால சித்தம நாயக்கரின் படை விரட்டி அடித்தது. தோல்வியடைந்த பாதுஷ்ஷா இரண்டாம் முறை படையெடுத்து வந்தான். இம்முறையும் அவனை வென்று அவனது குதிரைக்கு அணிவிக்கப்பட்டிருந்த முன்கவசம், பின்கவசம், முக கவசன், மணி ஆகிய வற்றை சித்தம நாயக்கர் குதிரைக்கு மாட்டி வெற்றிச்செய்தியோடு ராயரின் அரண்மனையில் ராயருக்கு முன்பாக குதிரை மீது ஏறி தன் கையில் பிடித்திருந்த கட்டாரியோடு சலாம் செய்தார். இதனால் பெரு மகிழ்ச்சி அடைந்த ராயர் அவுறா பாலமகட்டாரி என்றும் ராய ராவுத்த கண்டரெண்ரும் பட்டத்தை வழங்கி சிறப்பித்தார். மேலும்
1, ரணகளம்
2, ரண பாஷிக்கிம்
3, கலிகிதுறாயி
4, சந்திர வளையம்
5, சாமது ரோஹா
6, வெண்டயம்
7, நிகளம்
8, வீர கட்டாமணி
9, சிம்மலாடம்
10, பல்லக்கு
11, உபயசாமறம்
12, குஞ்சம்
13, காளாஞ்சி
14, விசிறி
15, சவுரி
16, சல்லி
17, விதவிதமான வெட்டுப்பாவாடைகள்
18, பூசக்கிர குடை, சிங்கடால்
19, மீீீனடால், புலிக்கொடி
20, சர்பக்கொடி
21, பஞ்சவர்ணடால்
22, வெள்ளைபக்கறடால்
23, செகசம்ப்புக்கொடை
24, சங்குசக்கிர சுருட்டி
25, சூரியபான்
26, ஆனைமே லம்பாரி
27, ஆனைமேல்பேறிகை
28, ஒட்டகைமேல் நகாறு
29, குதிரை மேல் டக்கா
29, எருது மேல் தம்பட்டம்
30, ரவுலத்து சங்கீத வாத்தியம்
31, சிக்கு மேளம்
32, பட்டு கட்டியம்
முதலிய பரிசுகளும் வாத்தியங்களும் கொடுத்து
1, முத்துச்சரம்
2, தும்பி பதக்கம்
3, கெண்டபேறுண்ட பதக்கம்
4, சிங்கமுக பதக்கம்
5, முங்கைமுதாறி
6, முச்தொண்டி
7, பச்சொண்டி
8, அம்பீரதாயத்து
முதலிய ஆபரணங்களும் கொடுத்து
கெனகனகபீதாம்பர வஸ்திரகங்ளும் கொடுத்து, நகர்வலம் வரச்செய்து. ராயர் சமஸ்தானத்திற்கு குமார வர்கமாக இருக்குமாறு உத்தரவிட்டார்.
தாராபுரம் பாளையப்பட்டு உருவான வரலாறு:-
பாலால சித்தம நாயக்கர் விஜயநகரத்தில் இருந்த காலத்தில் அவருக்கு 7 மகன்கள். அவர் விஜயநகரத்தின் குமாரவர்க்கமாக இருந்த காலத்திலேயே தெற்கில் மதுரையின் சமஸ்தானாதிபதியாக பதவியேற்றார்.
அவர் காலத்தில் மதுரை ராஜ்ஜியம் எங்கும் காடுகளாய், கள்ளர்களின் திருட்டுமாய் சிறப்பிழந்து இருந்தது இந்த அறிகையை இராயரிடம் சமர்பித்தின் பேரில் புக்க ராயரவர்கள் கம்பளத்தார்களை அழைத்து யார் யார் மதுரை ராஜ்ஜியத்தின் பகுதிகளுக்கு சென்று நிலைமையை சீர் செய்கிறார்களோ அவர்கள் சீர்செய்த பகுதிகளை அவர்களே சூரியன் சந்திரன் உள்ளவரை வம்ச பாரம்பரியமாக பாளையக்காரர்களாக ஆண்டுக்கொள்ளலாம் என ஆணையிட்டார். அப்போது தாராபுரம் பளையக்காரர்களின் முதாதையரான பாலம சித்தம நாயக்கரின் மகன் பள்ளிகொண்டம நாயக்கர் அவரின் குமாரன் ராயக்கொண்டம நாயக்கர் ஆகியோர்கள் தெற்கு நோக்கி வந்து கணுவாக்கு உட்பட்ட தாராபுரத்தின் கீழ்புறம் அமராவதிக்கரை ஓரம் உள்ள பிறமயம் என்ற ஊரை உருவாக்கி அவ்விடத்தில் தீங்கு செய்பவர்களை எல்லாம் அடக்கி அரண்மனைக்கு கீழ்படிபவர்களாக செய்துவிட்டு அதற்கு பின் தாராபுரத்திற்கு மேற்கே சென்று மங்கலம் பல்லா கோவில் என்னும் சீமையை உருவாக்கி அங்கு அவரின் இஷ்ட தெய்வமான வல்ல கொண்ட சுவாமியை பிரதிஷ்டை செய்து அதன் மேற்கே ஆனைமலையை சேர்ந்த மேமங்கலம் பறதலம் உண்டாக்கி, மங்கலத்திற்கு மேற்காக, நிகமு, வகுத்தன் பாளையம் என்ற ஊர்களை நிறுவி அவ்வூர்களில் உள்ள கள்ளர்கள் மற்றும் பிற தீய தொழிற் சாதிகளையும் அடக்கி அரண்மனைக்கு கீழ் படிய செய்துக்கொண்டு வந்த வேலையில்.
ராயர் அவர்கள் பாலால சித்தம நாயக்கர் செய்து வரும் காரியங்களை கேட்டு மகிழ்ச்சியடைந்தார். ராயக் கொண்டம நாயக்கருக்கு தேவநாயக்கர் என்றும் பல்ல நாயக்கர் என்றும் இரண்டு மகன்கள் இருந்தனர். இரண்டாம் பிள்ளைக்கு மங்கலம் சீமை தந்து மங்கலம் பல்லன கோவில் பாளையக்காராக முடிசூட்டினார்.
மூத்த பிள்ளை தேவநாயக்கருக்கு நிகமும் பளையக்காரர் என்று முடிசூட்டி ராயரின் தயவால் நிகமும் வகுத்தன் பாளையம், பிறமயம் இவை உள்ளடக்கிய பளையத்திற்கு நீயே ஆண்டுக்கொள் என்ற படியினாலே ராயர் சமஸ்தானத்தின் குமார வர்க்கமாவும், பாளையக்காரர்களாகவும் இருந்து வந்தனர்.
தாராபுரம் ஜமீன் வம்சாவளிகள்:-
அந்த நாள் முதல் சாலிவாகன சாபுதம், 1268இல் இருந்து 1716 வரை 448 ஆண்டுகள் தாராபுரத்தின்ஜமீன்களாக பட்டமேற்று தேவநாயக்கர் வம்சாவழி ஆண்டது. அவ்வாறு ஆண்ட பாளையக்காரர்கள்:-
1, ராயக் கொண்டம நாயக்கர் மூத்த மகன் தேவநாயக்கர் - (பட்டமிருந்தது 66 ஆண்டுகள்)
2, அபரஞ்சி கொண்டம நாயக்கர் - (பட்டமிருந்தது 40 ஆண்டுகள்)
3, குமார வல்ல கொண்டம நாயக்கர் - (பட்டமிருந்தது 29 ஆண்டுகள்)
4, தேவநாயக்கர் - (பட்டமிருந்தது 32 ஆண்டுகள்)
5, விஜய வல்ல கொண்டம நாயக்கர் - (பட்டமிருந்தது 16 ஆண்டுகள்)
6, வெங்கடாத்திரி நாயக்கர் - (பட்டமிருந்தது 30 ஆண்டுகள்)
7, சிகுராமவல்ல கொண்டம நாயக்கர் - (பட்டமிருந்தது 29 ஆண்டுகள்)
8, சிகுராம வல்ல கொண்டம நாயக்கர் - (பட்டமிருந்தது 21 ஆண்டுகள்)
9, தேவநாயக்கர் - (பட்டமிருந்தது 26 ஆண்டுகள்)
10, வல்ல கொண்டம நாயக்கர் - (பட்டமிருந்தது 14 ஆண்டுகள்)
11, அபரஞ்சி கொண்டம நாயக்கர் - (பட்டமிருந்தது 22 ஆண்டுகள்)
12, கொடுகு பல்ல நாயக்கர் - (பட்டமிருந்தது 35 ஆண்டுகள்)
13, தேவநாயக்கர் - (பட்டமிருந்தது 40 ஆண்டுகள்)
14, ரங்கப்ப நாயக்கர் - (பட்டமிருந்தது 30 ஆண்டுகள்)
15, முத்து குமார வேலாயித நாயக்கர் - (பட்டமிருந்தது 10 ஆண்டுகள்)
தாராபுரம் ஜமீீீன் கட்டுப்பட்ட பேரரசுகள்:-
தாராபுரம் பாளையக்காரர்கள் ராயர் சமஸ்தானத்திற்கு கட்டுப்பட்டும் அரண்மனை உத்தரவை மதித்தும் பாளையத்தை ஆண்டு வந்தார்கள்.
மதுரை தேசாதிபதி திருமலை நாயக்கர்ஆட்சிக்காலத்தில் திருமலை நாயக்கரின் அரண்மனை ஆணை ஏற்ற பளையக்காரர்களின் செயல்பாடு இருந்தது.
பிற்காலத்தில் மைசூர் சமஸ்தானத்தின் காலத்தில் பெறமயம் மற்றும் வகுத்தன் பாளையம் போன்ற கிராமங்களுக்கு வசூலிக்கப்பட்ட புதிய விரி கட்டணத்தை செலுத்தி மைசூர் அரசுக்கு கட்டுப்பட்டு ஆண்டு வந்தது.
ஆங்கிலேயர் காலத்தில் சென்னல் மேடோசு கோயமுத்தூரை முகாமிட்ட சமயத்தில் அப்போது பட்டமிருந்த வேலாயித நாயக்கரை சந்தித்து பேசினார் இருவருக்கும் நல்ல நட்பு ஏற்பட்டு ஆங்கிலேய எதிர்ப்பு இன்றி பாளையத்தை நல்லபடியாக கவனித்து வந்தனர்.

![]() |
| ஸ்ரீ கிருஷ்ணன் |

| யாதவ குல கம்பளத்தார் |

| புக்கராயர் |

| கட்டாரி |

| அமராவதி ஆறு |

Comments
Post a Comment