மாம்பாறை பாளையக்காரர்

மாம்பரை பாளையப்பட்டு வரலாறு:-







கீழ்க்காணும் தகவல்கள் மாம்பரை பளையப்பட்டு வம்சாவழி குறித்த அரசு ஆவணத்தில் இருந்து எளிமைப்படுத்தி எழுதப்பட்டது.








மாம்பரை






பாளையத்தின் முன்னோர் சகரம் தம்மைய நாயக்கர் வரலாறு:-




மாம்பரை பாளையப்பட்டின் வம்சாவழி முன்னோரான சகரம் தம்மைய நாயக்கர் விஜயநகர ராயர் ராஜ்ஜியத்தில் கொட்டியம் நாகம நாயக்கருக்கு சேவகம் செய்துக்கொண்டிருந்தார். அப்போது நாகம நாயக்கருக்கு வெகு நாட்களாய் குழந்தை பாக்கியம் இல்லாததால் காசிக்கு சென்று கங்கையில் நீராட புறப்பட்ட போது தம்மைய நாயக்கரும் அவருடன் உடன் சென்றார். காசியை அடைந்த நேரத்தில் நாகம நாயக்கர் தம்மைய நாயக்கரிடம் நான் இப்போது கங்கையில் நீராடச்செல்கிறேன் அதுவரை நீ கரையின் மீதிருந்து மிக கவனமாக காவல் காத்துக்கொண்டிரு என உத்தரவிட்டார். அவ்வாறே நம்மைய நாயக்கரும் காவல்காத்தார். கங்கா ஸ்நானத்திற்கு பிறகு நாகமர் தவத்தில் ஆழ்ந்தார் இவ்வாறாக பல நாட்கள் காசியில் இருந்த வேளையில் ஒரு நாள் இரவு நாகம நாயக்கர் கனவில் தோன்றிய காசி விஸ்வநாதர் குழந்தை பிறக்கும் வருத்தமடைய வேண்டாம் என கூறி மறைந்தார். ஈசன் வாக்கால் மகிழ்ச்சியடைந்த நாகமர் இச்செய்தியை தம்மைய நாயக்கரிடம் பகிர்ந்துக்கொண்ட போது தம்மையா நாகமரிடத்தில் சுவாமி தங்களுக்கு குழந்தை பிறந்தால் அவர்களுக்கும் நானே சேவகம் செய்ய வேண்டும் என விரும்புகிறேன் ஆணையிடுங்கள் என வேடிக்கையாக கூறினார் ஆனாலும் நாகமர் என்னை ஆறுதல் படுத்த கூறுகிறியா என வேதனைப்பட்டார் இல்லை சுவாமி உங்களுக்கு குழந்தை பிறக்கத்தான் போகுது நாங்கள் தான் அவனை காத்துக் கொண்டிருக்க போகிறோம் என தம்மைய நாயக்கர் கூறினார்.  மறுநாள் அதிகாலை கங்கையில் நீராட நாகமர் சென்றார் அப்போது அவருக்கு காசி விஸ்வநாத சுவாமியின் மரகத லிங்கம் கிடைத்தது. மரகத லிங்கத்தை ஒரு பெட்டியிலே வைத்துக்கொண்டு விஜயநகரம் புறப்பட தயாரானார்கள் தம்மையாவும், நாகமரும் தங்களது படைகளுடன். தம்மைய நாயக்கர் சுவாமியின் லிங்கம் உள்ள பல்லக்கிற்கு காவல் ஏற்று விஜயநகரம் வந்தடைந்தனர். 






கங்கை நதி காசி




காசியில் இருந்து திரும்பி ஒராண்டு கழிந்து நாகம நாயக்கருக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது காசி விஸ்வநாதரின் அருளால் பிறந்ததால் விஸ்வநாதன் என பெயரிட்டனர். அவ்வேளையில் நாகமருக்கு காசியில் நடந்ததை நினைவூட்டும் விதமாக நான் முன்பே கூறியதை போல் தங்களுக்கு குழந்தை பிறந்து விட்டது என்றும் அதுமட்டுமல்ல சுவாமி மரகத லிங்க பல்லக்கிற்கு நாங்கள் காவலாக வந்த பாக்கியம் குழந்தை பிறந்துள்ளார் என் அன்போடு சொல்லி அத்தோடு தன்னையே குழந்தையின் காப்பாளராக நியமிக்குமாறும் தம்மைய நாயக்கர் கேட்க நாகம நாயக்கர் முழுமனதுடன் சம்மதம் தெரிவித்து மாதம் 1க்கு ஆயிரம் வீதம் ஆண்டுக்கு பின்னிரெண்டாயிரம் மதிப்புள்ள நிலங்களையும் தம்மைய நாயக்கருக்கு நாகம நாயக்கர் கொடுத்தார். 





குழந்தை விஸ்வநாதன் 16 வயது இளைஞனான போது விஜயநகரம் மீது வடக்கில் இருந்து படையெடுத்து வந்தவர்களுடன் விஸ்வநாத நாயக்கர் போரிட்டு வென்று சிறு காயங்களுடன் விஜயநகரம் திரும்பி தம்மைய நாயக்கரிடம் சென்ற காரியம் வெற்றிப்பெற்றது மகிழ்ச்சியுடன் கூறி மேலும் சில ராயர் சமஸ்தானத்திற்கு பணியாத பாளையங்கள் படைகளுடன் சென்று அடக்குமாறி தம்மையாவிடம் விஸ்வநாத நாயக்கர் கூறினார்.
தம்மைய நாயக்கரும் படைகளுடன் சென்று கலகம் செய்த பாளையங்களை தனது படைக்கொண்டு அடக்கிவிட்டு விஸ்வநாதனை காண சென்றார். வெற்றிச்செய்தியை கேட்ட விஸ்வநாதர் தம்மைய நாயக்கரை கௌரவித்து பல வெகுமதிகளை தந்து மேலும் அடக்கப்பட்ட பாளையங்களில் இருந்து கைப்பற்றப்பட்டவைகளை தம்மைய நாயக்கரே வைத்து கொள்ளுமாறும் உத்தரவிட்டார். சில காலம் கழித்து பாண்டிய நாட்டில் வீரசேகர சோழனுக்கும், சந்திரசேகர பாண்டியனுக்கும் சண்டை ஏற்பட்டது. சந்திரசேகர பாண்டியன் வீரசேகர பாண்டியனிடம் ராஜ்ஜியத்தை இழந்து விஜயநகரம் வந்து கிருஷ்ணதேவராயரின் உதவியை நாடினார். எனவே ராயர் நாகம நாயக்கரை கலகத்தை ஒடுக்க அனுப்பிவைத்தார் ஆனால் நாகம நாயக்கர் வீரசேகர சோழனை அடக்கிவிட்டு நாட்டை பாண்டியனிடம் வழங்காமால் தானே எடுத்துக்கொண்டார்.






கிருஷ்ணதேவராயர் 



நாகம நாயக்கரின் செயலை அறிந்து கோபமடைந்த கிருஷ்ணதேவராயர் நாகமரின் தலையை வெட்டி கொண்டுவர தனது வீரர்களுக்கு ஆணையிட்டார் வீரர்கள் அனைவரும் மௌனமாக இருந்தனர் யாரும் முன்வரவில்லை இறுதியாக நாகமரின் மகன் விஸ்வநாத நாயக்கர் தனது தந்தையை பிடித்துக்கொண்டு வர ராயரின் அனுமதியோடு படைகளுடன் புறப்பட்டு பாண்டிய நாட்டை வந்தடைந்தார். தம்மை நாயக்கரிடம் விஸ்வநாத நாயக்கர் "ராயரின் ராஜ்ஜியத்தில் சுக போகங்களை அனுபவித்துவிட்டு ராயருக்கே துரோகம் செய்வது தெய்வ குத்தத்திற்கு ஒப்பானது எனவே சந்திரசேகர பாண்டியனுக்கு பட்டம் கட்டிவிட்டு நம்முடன் விஜயநகரம் திரும்பினால் உயிர் சேதம் இல்லாமல் தவிர்க்கலாம்" என  நாகம நாயக்கரிடம் தூது கூறி அழைத்துவருமாறு தம்மைய நாயக்கரை அனுப்பிவைத்தார். நாகம நாயக்கரிடம் தூது சென்ற தம்மைய நாயக்கர் விஸ்வநாத நாயக்கர் கூறியதை நாகம நாயக்கரிடம் கூறினார். தூதை கேட்ட நாகம நாயக்கர் நாம் இவ்வளவு தூரம் கஷ்டப்பட்டு படையெடுத்திருக்கிறோம். இதற்காக நமக்கு திரவியங்கள் தர வேண்டும் என்றும் கொல்லவார்கள் பட்ட துயரங்கள் மற்றும் அவர்களின் தியாகங்களை எடுத்துக்கூறி கொல்லவார் நாட்டை தான் உருவாக்கப்போவதாக கூறி தம்மைய நாயக்கரை திருப்பி அனுப்பினார்.





நாகம நாயக்கர் மற்றும் சகரம் தம்மைய நாயக்கர் இடையிலான உரையாடலை காவல் கோட்டத்தின் 48முதல் 70 வரையிலான பக்கங்களில் மேலும் விவரமாக படித்து அறியலாம்.





நாகம நாயக்கர் தன்னிடம் கூறியவைகளை விஸ்வநாதரிடம் வந்து தம்மையா கூறினார். கோபமடைந்த விஸ்வநாத நாயக்கர் நாகமர் புறப்பட்டு நம்மோடு வந்தால் ஆச்சு இல்லை என்றால் தலையை வெட்டி கொண்டுபோவோம் எனக்கூறிவிட்டு வருமாறு தம்மைய நாயக்கரை விஸ்வநாதர் மீண்டும் தூது அனுப்பினார். இச்செய்தியை நாகமரிடம் கொண்டு சேர்ந்ததால் தம்மைய நாயக்கரிடம் கடுங்கோபங்கொண்ட நாகம நாயக்கர் "தவமிருந்து பிள்ளையை பெற்றதும் அவனுக்கு உன்னை காவலாக வைத்ததும் என் தலையை வெட்டிக்கொண்டு போகவா" எனக்கூறி தம்மைய நாயக்கருக்கு விலங்கிட்டார் அப்போது நாகமரை பார்த்து தம்மையா "சுவாமி நான் விஸ்வநாதர் சொன்னதன் பேரிலே நான் கட்டுப்படு தூது வந்தேன் தகப்பன்போன்றவருக்கு துன்பம் நேர இருந்தால் பிள்ளைகள் நாங்கள் என்ன செய்ய போகிறோம்" எனக்கூறினார். தனது கொள்கையில் உறுதி கொண்ட நாகமர் பதினைந்து நாட்கள்சிறையில் கிட என உத்தரவிட்டு தம்மையாவை சிறையில் அடைத்தார். சோகத்தில் உண்ணா நோன்பு இருந்த் உயிர்நீத்தார் தம்மையா. இச்செய்தியை அறிந்த நாகம நாயக்கர் நமக்கு உறுதுணையாக இருந்தவனை கொன்றுவிட்டோமே என மிகுந்த வருந்தத்திற்கு ஆளானார். தம்மையா இறந்த விசயத்தை கேட்டு அறிந்துக்கொண்ட விஸ்வநாத நாயக்கர் மிகுந்து துக்கமடைந்து இரண்டு நாட்கள் உணவருந்தாமல் இருந்து இப்படிபட்ட மனிதனை இனி எப்போது காணப்போகிறோம் என கூறி துயரத்தில் இருந்தார். 





தொப்பள நாயக்கர் (முதல் பட்டம்):-




தம்மைய நாயக்கர் இறந்த துயரத்தில் இருந்து மீண்டு வந்த விஸ்வநாத நாயக்கர் தம்மைய நாயக்கருக்கு யாராவது பிள்ளைகள் இருக்கிறார்களா என விசாரிக்கும் போது அவருக்கு இருபது வயதில் ஒருமகன் இருப்பதும் அவன் தந்தையை போலவே மிகுத்த சூரன் என்பதையும் அறிந்து அவனை அழைத்து வந்து சமாதானம் கூறி தம்மையாவின் ஸ்தானத்திற்கு தொப்பள நாயக்கரை நியமித்து ஆண்டு ஒன்றுக்கு பண்ணிரெண்டாயிரம் வருவாய் தரக்ககூடிய கிராமங்களையும் அவனுக்கு விஸ்வநாத நாயக்கர் விட்டுகொடுத்தார். பிறகு நாகம நாயக்கர் மீது படை எடுத்து போரில் பெரும் உயிர் சேதங்கள் ஏற்பட்டு பின் நாகமரை கைது செய்து கிருஷ்ணதேவராயர்முன் நிறுத்தினார் விஸ்வநாதர். விஸ்வதாதனின் நேர்மையை மெச்சிய ராயர் நாகமரை விடுதலை செய்தும், மதுரைக்கு விஸ்வநாத நாயக்கரையே மன்னராக முடிசூட்டவும் உத்தரவிட்டார். 






அமராவதி காட்டுப்பகுதி




கிருஷ்ணதேவராயர் உத்தரவின்படியே முடிசூட்டப்பட்ட பிறகு மதுரை திரும்பினார் விஸ்வநாத நாயக்கர் அங்கு முதலாகவே தொப்பள நாயக்கர் ஆஜர் ஆகி இருந்தார். இருவரும் சேர்ந்து அமராவதி நதியில் குளித்துக்கொண்டிருக்கும் போது இந்த அமராவதியில் இருந்து தண்ணீர் வீணாக கடலின் சென்று கலக்கிறது என்று விஸ்வநாத நாயக்கர் சொல்ல அதற்கு தொப்பள நாயக்கர் ஆற்றுக்கு குறுக்கே அணைக்கட்டி காடு மேடு எல்லாம் பள்ளமாக்கி பயிர் விளையும் பூமியாக செய்வதாக கூறியதற்கு அவ்வாறே செய் என விஸ்வநாத நாயக்கர் உத்தரவு கொடுத்தார். அவ்வாறே இப்போது ராஜ்ஜியம் எல்லாம் காடுகளாகவும் புலிகளாகவும் இருக்கின்றன காடுகள் மேடுகளை திருத்தி தண்ணிர் வரச்செய்கிறேன் என விஸ்வநாத நாயக்கருக்கும், தளவாய் அரியநாத முதலியாருக்கும் ஓலை எழுதி அனுப்பினார். தொப்பள நாயக்கர் செய்த காரியங்களை கண்டு வருமாறு அரியநாத முதலியாரை விஸ்வநாத நாயக்கர் அனுப்பினார். அவ்வாறே வந்து தொப்பள நாயக்கர் செய்தவற்றை எல்லாம் கண்டு மிக்க சந்தோஷமடைந்து இப்படி ஒரு புத்திமானை பார்த்தது இல்லை என வியந்தார் அரியநாதர். அப்படியே எனது வீரத்தையும் காணுங்கள் என கூறி மாம்பரை மலை மேலே அழைத்துச்சென்று ஒரு யானையின் தொப்புள் மேல் உதைத்து யானையை கீழே விழச்செய்தார்  இதையும் கண்ட அரியநாத முதலியார் இதுபோன்ற பராக்கிரமசாலியையும் கண்டதில்லை என விஸ்வநாத நாயக்கருக்கு ஓலை அனுப்பினார்.
இதனால் தான் இவருக்கு தொப்புள நாயக்கர் என்னும் பெயர் வந்தது.




இக்காலகட்டத்தில் பழனி தண்டாயுதபாணி சுவாமியை தரிசனம் செய்ய விஸ்வநாத நாயக்கர் வந்து இந்த காடுகள் மற்றும் செடிகளையும் கண்டு இவ்விடம் எனக்கு மிகவும் பிடித்துள்ளது நான் இங்கே இருக்க விரும்புகிறேன் எனக்கூறியும் கரூர், காங்கேயம் முதலிய ஊர்கள் நன்கு செழித்திருந்ததால் உபரி வரிப்பணம் வரும் என்பதற்காகவும் மகிழ்ந்த விஸ்வநாத நாயக்கர். தொப்பள நாயக்கருக்கு குமாரவர்கம் என பெயர் கொடுத்து மதுரை கோட்டையை சுற்றி எழுபத்திரண்டு கோட்டை கட்டிய போது நாற்பதாவது கோட்டையும், பாளையமும் தொப்பள நாயக்கருக்கு தந்தார் விஸ்வநாதர். பழனிக்கு கிழக்கு, முக்காதவளிக்கு கிழக்கு, அமராவதிக்கு தெற்கு முதலிய பகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகள் தரப்பட்டது. மேலும் தான் மாம்பரை மலை அருகில் இருந்தால் பழனி சுவாமி தரிசனம் செய்யலாம் என்பதால் தான் இங்கேயே தங்குவதாக விஸ்வநாத நாயக்கர் தொப்பள நாயக்கரை கேட்டுக்கொண்டார். பிறகாக பண்டியனின் வைப்பாட்டி பிள்ளைகளான கயித்தாற்று பாண்டியர்கள் தாங்கள் தான் உண்மையான பண்டியர்கள் என கலகம் செய்தனர் கலகத்தை ஒடுக்க தளவாய் விசனபாகம் கேசவ நாயக்கரும் தொப்பள நாயக்கரும் போர்களம் சென்று போரிட்டனர் இதில் கேசவ நாயக்கருக்கு போரில் காயம் ஏற்பட்டதால் தொப்பள நாயக்கரே நாயக்க படைக்கு தலைமையேற்று நடத்தி பாண்டியரகளின் யானை அம்பாரிகளை யானைக்கு அடியில் அறுத்து எறிந்தார் இதனால் கயித்தாறு பாண்டியர்கள் படை சிதறி ஓடியது இதனால் தொப்புல நாயக்கர் மாபெரும் வெற்றிப்பெற்றார். கயிதாறு பாண்டியர்களிடம் இருந்த செல்வங்களை எல்லாம் எடுத்து வந்து கேசவ நாயக்கரிடத்தில் தொப்பள நாயக்கர் கொடுத்தார். இதனால் பெருமகிழ்ச்சி அடைந்த கேசவ நாயக்கர்வெகுமதிகள் தந்து உன் போன்ற திராணி உள்ளவர் யவரும் இல்லை எனக்கூறி சிறப்பித்தார். தொப்பள நாயக்கர் 12வருடங்கள் பட்டமிருந்து பின் சிவலோக பதவியடைந்தார்.





இரண்டாம் பட்டம்:-



இவருக்கு பின் இவரது மகன் பொம்மள நாயக்கர்ஆட்சிக்குவந்தார். இவர் மதுரை நாயக்கராட்சிக்கு கட்டுப்பட்டு பளையத்தை ஆட்சி செய்தார். மதுரை அரசரின் மகன் போல இருந்து பாளைய கொத்தளங்களை காத்து வந்தார். அமராவது ஆறு வரண்டு விடாதவாறு செழிப்பாக ஆட்சி செய்தார். இவர் பட்டமிருந்த ஆண்டுகள்.......




மூன்றாம் பட்டம்:-



இவரின் குமாரன் பெருமாள் நாயக்கர்இவர்காலத்தில் காடு செடிகளை எல்லாம் திருத்தி ரூ20,000  மதிப்புடைய சீமைகளை உருவாக்கினார். சிறந்த சிவ பக்தராக விளங்கினார். தான தர்மங்கள் மிகுதியாக செய்தவர். 60 ஆண்டுகள் பட்டமிருந்து சிவலோக பதவியடைந்தார்.




நான்காம் பட்டம்:-



இவரின் குமாரன் பொம்மள நாயக்கர்இவர்காலத்தில் காடு செடிகளை எல்லாம் திருத்தி ரூ20,000  மதிப்புடைய கிராமங்களை உருவாக்கினார். சிறந்த சிவ பக்தராக விளங்கினார். தான தர்மங்கள் மிகுதியாக செய்தவர். 75 ஆண்டுகள் பட்டமிருந்து சிவலோக பதவியடைந்தார்.





ஐந்தாம் பட்டம்:-




இவரின் மகன் போர் கருது  நாயக்கர்இவர்காலத்தில் காடு செடிகளை எல்லாம் திருத்தி இருபதாயிரம்  மதிப்புடைய கிராமங்களை உருவாக்கினார். சிறந்த சிவ பக்தராக விளங்கினார். தான தர்மங்கள் மிகுதியாக செய்தவர். 65 ஆண்டுகள் பட்டமிருந்து சிவலோக பதவியடைந்தார்.




ஆறாம் பட்டம்:-





இராமேஸ்வரம் 



இவரின் மகன் மலையப்பொம்மு  நாயக்கர்இவர்காலத்தில் காடு செடிகளை எல்லாம் திருத்தி இருபதாயிரம்  மதிப்புடைய கிராமங்களை உருவாக்கினார். சிறந்த சிவ பக்தராக விளங்கினார். தான தர்மங்கள் மிகுதியாக செய்தவர். இவர் நாளையில் தான் திருமலை நாயக்கரின் தளவாய் ராமபையன் மரவன் சேதுபதி மீது படையெடுத்தார் அப்போது குமாரவர்கமாக இருந்த மலையப்பொம்மு நாயக்கர் போரில் ஈடுபட்டு எழுபத்திரண்டு பாளையப்பட்டிற்கும் முன் மலையப்பொம்மு நாயக்கர் படை சென்றது. யுத்தம் நிகழ்ந்து உயிர் இழப்புகள் ஏற்பட்டன. போரில் சூரப்பையன்மரணமடைந்தார். பின்பு சேதுபதி பாம்பன் ஆற்றை கடந்து ராமேஸ்வரம் தப்பிச்சென்றார். அவரை அணைக்கட்டி பிடிக்க ராமபையனின் படையும் மலையப்பொம்மு நாயக்கர் படையும் தனிதனியே சென்றனர் இடையில் சேதுபதியின் மருமகன் வள்ளிநாயகருக்கும் மலையப்பொம்மு நாயக்கர் சண்டை ஏற்ப்பட்டதில் வன்னியதேவனும், மலையப்பொம்மு நாயக்கர் போரில் மரணமடைந்தார். இவர்பட்டமிருந்த ஆண்டுகள் 75.




ஏழாம் பட்டம்:-




இவரின் மகன் குமார கருது நாயக்கர்இவர்காலத்தில் காடு செடிகளை எல்லாம் திருத்தி இருபதாயிரம்  மதிப்புடைய கிராமங்களை உருவாக்கினார். சிறந்த சிவ பக்தராக விளங்கினார். தந்தையின் மரணம் ஏற்பட்டதில் இருந்து தான தர்மங்கள் மிகுதியாக செய்தவர். ராமேஸ்வரம் போரின் போது ராமபையன் அவர்கள் கருது நாயக்கரை அழைத்து உனது தந்தையை போன்ற வீரரை நான் கண்டதில்லை அவரின் தியாகத்தால் தான் இன்று சேதுபதியை வென்றிருக்கிறோம் போரில் ஜெய்த்த சந்தோசம் இருந்தாலும் உனது தந்தையின் இழப்பு வருத்தம் தருகிறது. போரில் இருந்து நீ மீண்டாயே அதுவே எனக்கு மகிழ்ச்சி எனக்கூறி வஸ்திரமும் பாக்கு வெற்றிலையும்கொடுத்து பட்டம் கட்டிவைத்தார். பின்பு ராமேஸ்வரத்தில் இருந்து மதுரைக்கு அழைத்துச்சென்று திருமலை நாயக்கர் உத்தரவு பெற்றுவிட்டு மாம்பரை திரும்பினார் குமார கருது நாயக்கர். இவர் 90 ஆண்டுகள் பட்டமிருந்தார்.




எட்டாம் பட்டம்:-



இவரின் மகன் வெங்கடராம  நாயக்கர்இவர்காலத்தில் காடு செடிகளை எல்லாம் திருத்தி இருபதாயிரம்  மதிப்புடைய சீமைகளை உருவாக்கினார். சிறந்த பக்தராக விளங்கினார். தான தர்மங்கள் மிகுதியாக செய்தவர். 60 ஆண்டுகள் பட்டமிருந்து சிவலோக பதவியடைந்தார்.




ஒன்பதாம் பட்டம்:-



இவரின் மகன் பரசுராம  நாயக்கர் இவர்காலத்தில் காடு செடிகளை எல்லாம் திருத்தி இருபதாயிரம்  மதிப்புடைய சீமைகளை உருவாக்கினார். சிறந்த சிவ பக்தராக விளங்கினார். வஸ்திரதானம், அன்னதானம் முதலிய தர்மங்கள் மிகுதியாக செய்தவர். 60 ஆண்டுகள் பட்டமிருந்து சிவலோக பதவியடைந்தார்.
இவரது தந்தை வெங்கடராம நாயக்கர் காலத்திலேயே மாம்பரை ஜமீனி சில நிலங்களை தாறாபுதார்களும், விசய மங்களத்தார்களும் எடுத்துக்கொண்டனர். மாம்பரை பாளையத்திற்கு வரிப்பணமாக தொள்ளாயிரம் முதல் ஆயிரம் ரூபாய் வரிக்கொடுத்து மதுரை, மைசூர் மற்றும் ஆங்கிலேயர் காலம் வரை பாளையத்தை ஆண்டுவந்தனர்.



மாம்பரை பாளையப்பட்டு வம்ச வழக்கத்தின்படி தந்தை இறக்கும்போது மகனுக்கு பட்டத்து ஆயுதமும், பாக்கு வெற்றிலையும் கையில் கொடுத்து நாடக சாலையில் குடிமக்களை கூட்டி அவர்கள் முன் பட்டம் கட்டுவது கம்பளத்து வெங்கிலியர் (வெக்கிலியர்)குலத்தை சேர்ந்த மாம்பரை பாளையக்காரர்களின் வழக்கம்.





மாம்பரை பாளையத்தின் எல்லைகள்:-




தலையநாடுக்கு கிழக்கு, சேர்ந்த மங்களத்திற்கு மேற்கு, மேற்கு தலைநாட்டு பெருளூருக்கு மேற்கு, எடையார்கோட்டைக்கு தெற்கு, எல்லை கிணற்றுக்க வடக்குமாக பாளையத்தின் எல்லை விரிந்திருந்தது.







மாம்பரை பளையத்தின் கீழ் இருந்த கிராமங்கள்:-





மாம்பரை பாளைய கிராமங்கள்




1, கசுபா மாகன் பட்டி
2, சாமிநாதன் பலசை
3, எல்லைப்பட்டி
4, பாறப்பட்டி
5, கதிரியாபாளையம்
6, அய்யம்பாளையம்
7, அத்தப்பம் பட்டி
8, வடுகப்பட்டி 
9, கணவாய்பட்டி
10, நாக்கியாகவுண்டன் பலசை
11, ஆஹசகிலி கிராமம்
12, தாகலிகிராமம்
13, பாழ்கிராமம்
14, பழையக்கோட்டை
15, ரங்கவிலாச கோட்டை
16, ஆயக்கட்டு 






அய்யம்பாளையம் 





மாம்பரை பளையக்காரர்களுக்கு அரசர்களால் வழங்கப்பட்ட விருதுகள்:-




* ரணவா சிங்கம்
* ஒண்டி முத்து துறாயி
* காலுக்கு போடுகிற நிகளம்
* தங்க முஞ்சி
* சாமுத்திறோகர் வண்டயம்
* வெள்ளை பக்கறடால்
* பகல் தீவிட்டி
* சுறுட்டி
* சூரியபான்
* உபய சாமறம்
* வெட்டு பாவாடை
* விசிறி
* பிடி செம்பு
* காளாஞ்சி
* அஞ்சிமுகம் ஏழுமுக தீவிட்டி
* குதிரைக்கு முன்ஜல்லி பின்ஜல்லி, மணிகால், அந்தை
* கலிகிதுராயி

Comments

Popular posts from this blog

தாராபுரம் பாளையம் :6