கொல்லவார் கண்ணன்
கொல்லவார் கவிதை
========================
கொல்ல குல தந்தையே உலகின்
குறைவில்லா சிந்தையே !
கள்ளமில்லா குலத்தின் காவலனே உலகின்
உள்ளமெல்லாம் இருப்பவனே !
எம் குல வேந்தனே
கொல்லவாருக்கு தீங்கிழைத்த கம்சனை
கொல்ல வந்தோனே,
எம் குல வேந்தனே !
மதுராபுரி ஆண்டவனே
அழகர் மலையில் வாழ்பவனே
எம் குல வேந்தனே !
அதர்மம் அழிக்க தர்மத்தின்
துணை நின்றோனே
எம் குல வேந்தனே !
கீதை தந்த கீத கோவிந்தமே !
எம் குல வேந்தனே !
பேய் மழை இலிருந்து கொல்லவார் ஐ
கோவர்த்தன மலை ஏந்தி காத்தோனே,
எம் குல வேந்தனே !
அவதாரம் பல எடுத்து உலகத்தின்
அழிவை காத்தோனே!
எம் குல வேந்தனே !
-உன் போல்
சொல்ல யாருமில்லை
கொல்லவாருக்கு நீதான் எல்லை !
Comments
Post a Comment