தவசி மேடு பாளையம் ;7
தவசிமடு பாளைய வம்சாவழி கணக்கு ஓலைப்பட்டயத்தில் இருந்து எடுத்து எளிமைப்படுத்தி எழுதப்பட்டது.
சோத்தழ நாயக்கர் பூர்வீக வரலாறு:-
முன்னொரு காலத்தில் குந்தி தேசத்தில்
இருந்தபோது துலுக்கர் பெண் கேட்டதால் கம்பளத்து மக்கள் குடிப்பெயர்ந்து பாண்டிய தேசம் நோக்கி செல்லும் வழியில் துலுக்கர் படை துரத்தி வரும் தருவாயில் ஒரு பெரிய ஆறு குறுக்கிட்டது. அந்த ஆற்றினை கடக்க முடியாமல் கம்பளத்தார்கள் தங்களில் குல தேவதைகளை வேண்ட புங்க மரங்கள் பாலமாக ஆற்றின் குறுக்கே வழுந்து கம்பளத்தார்கள் ஆற்றின் மறுக்கரையை அடைய உதவியது. மேலும் பின்னால் வந்த துலுக்க படை ஆற்றினை கடக்க முயலும் போது புங்க மரங்கள் விலகிச் சென்று நொருங்கி உடைந்தது இதனால் துலுக்கர் படை ஏமாற்றத்துடன் திரும்பிச்சென்றது.
தவசிமடுபளையம் உருவான வரலாறு:-
ஆற்றின் மறுக்கரையை அடைந்த கம்பளத்தார்கள் தவசிமடு பளையத்தின் முன்னோரான சோத்தழ நாயக்கர் தலைமையில் பாண்டிய தேசத்திற்கு பயணப்பட்டுச் சென்று மதுராபுரிக்கு வடமேற்கில் உள்ள சிறுமலைப்பகுதியில் தங்கள் குழந்தை குடும்பங்களுடன் வந்த கம்பளத்தார்கள் தங்கினர். அப்பகுதி முழுவதும் அடர்ந்த வனங்களாய் இருந்த காரணத்தினால் குடிகள் தங்க ஏற்றதாக இல்லை எனவே சோத்தழ நாயக்கர் தனது தெய்வங்களை நோக்கி இரவு பிகல் அறுபது நாளிகை விளக்கின் சோதியைக்கொண்டு தவம் செய்தார். தவத்தின் பயனாக தெய்வம் தோன்றி சோத்தழ நாயக்கரிடம் காட்டுச் செடிகளை திருத்தி கிராமத்தை உண்டாக்குமாறும், சன்னியாசி பெரியவர்களும் தவசிகளும் வாழும் மலை என்பதால் "தவசிமடு" என பெயரிடுமாறும் கூறி மறைந்தது.
தெய்வத்தின் வாக்குப்படி காடுகளை திருத்தி பயிர் செய்து பயிர்கள் செழித்து வளரும் நேரத்தில் சந்திரசேகர பாண்டியனுக்கும் வீர சோழனுக்கும் எற்பட்ட கலகத்தை தீர்க்க வந்த கொட்டியம் நாகம நாயக்கர் பழனி சென்று சாமி தரிசனம் செய்ய திண்டுக்கல் வழியாக செல்லும் சமயத்தில் நோய்வாய்ப்பட்டார். அப்போது நாகம நாயக்கரிடத்தில் சில பெரியவர்கள் கூறுகையில் நாம் கடந்து வந்த பாதையில் தான் தவசிமடு என்ற பாளையம் இருக்கிறது அங்கு கம்பளத்தான் சாமி(சோத்தழ நாயக்கர்) இருக்கிறார். அவர் உங்களது உடல் உபாதையை நீக்குவார் என ஆலோசனை கூறினார்கள். நாகம நாயக்கர் உடனே கம்பளத்தான் சுவாமிகளை அழைத்து வாருங்கள் என வீரர்களுக்கு கட்டளையிட்டார். வீரர்கள் சென்று தவத்தில் இருந்த சோத்தழ நாயக்கரை அழைத்து வந்தனர். நோய்வாய்ப்பட்ட நாகமரை கண்ட சோத்தழ நாயக்கர் தனது பையில் இருந்த விபூதியை எடுத்து தெய்வங்களை பிராத்தித்துக்கொண்டு நாகம நாயக்கர் மீது போட்டார் இதனால் நாகமரின் உடல் நோய்கள் சட்டென நீங்கியது. மகிழ்ச்சி அடைந்த நாகம நாயக்கர் தவசிமடுவின் காடுகளை சீராக்கி பாளையம் உருவாக்கி நீங்களே பாளையக்காராக முடி சூட்டிக்கொண்டு எங்கள் அதிகாரத்திற்கு கீழ்ப்படிந்து ஆண்டுக்கொள்ளுங்கள் என சோத்தழ நாயக்கரிடம் கூறி அனுப்பினார்.
தவசிமடு திரும்பிய சோத்தழ நாயக்கர் உபரியாக இருந்த காட்டை சிறிது மக்களைக்கொண்டு சீர் செய்து கிராமங்களை உண்டாக்கி மக்கள் வாழும் படியாக செய்தார். இதன் காரணமாக நாகமர் தவசிமடுபாளையம் என்னும் பெயரைக் கொடுத்து பரம்பரை வம்சாவழியாக அண்டு வருமாறு உத்தரவிட்டார். இவ்வாறாக சோத்தழ நாயக்கர் ஆண்டு வந்தார். பிறகு மதுரை அரசராக கொட்டியம் விஸ்நாத நாயக்கர் ஆட்சிக்கு வந்த காலத்தில் அரியநாத முதலியாருடன் சேர்ந்து மதுரை கோட்டையின் திருமஞ்சன வாசலை சுற்றி 72 கோட்டை கொத்தளங்கள் அமைத்த போது தவசிமடு கோட்டை சோத்தழ நாயக்கருக்கு தரப்பட்டது. தரப்பட்ட பாளையத்தை சிறப்பாக அறுபது வருடங்கள் ஆட்சி செய்தார். ஒருமுறை விஸ்வநாத நாயக்கரும், அரியநாத முதலியாரும் கயித்தார் மீது போர் தொடுக்கும் போது சோத்தழ நாயக்கரை விஸ்வநாதர் அழைத்து அரசர்களின் கூடாரத்தை காக்கும் பொறுப்பை கொடுத்து விட்டு போருக்கு கிளம்பினார். இவ்வேளையில் கூடாரத்திற்க்கு செல்லும் பாதையில் சண்டை ஏற்பட்டு சோத்தழ நாயக்கர் சிவலோக பதவியடைந்தார்.
தவசிமடு பாளைய வம்சாவழிகள்:-
இரண்டாவது பட்டம் சோத்தழ நாயக்கரின் மகன் ரகுராம சோத்தழ நாயக்கர் மதுரை அரசின் ஆணைக்கு கட்டுப்பட்டு கொத்தளங்களை காத்து நாற்பத்திரண்டு வருடங்கள் ஆட்சி செய்தார்.
மூன்றாம் பட்டம் ரெகுராமு சோத்தழ நாயக்கர் மதுரை அரசின் ஆணைக்கு கட்டுப்பட்டு கொத்தளங்களை காத்து நாற்பத்தொன்பது வருடங்கள் ஆட்சி செய்தார்.
4ம் பட்டம் ரகுராமு சோத்தழ நாயக்கர் மதுரை அரசின் ஆணைக்கு கட்டுப்பட்டு கொத்தளங்களை காத்துக்கொண்டும் ஜம்பது வருடங்கள் ஆட்சி செய்தார்.
5ம் பட்டம் அவரின் மகன் ரெகுராமு சோத்தழ நாயக்கர் மதுரை அரசின் ஆணைக்கு கட்டுப்பட்டு கொத்தளங்களை காத்து இரண்டு வருடங்கள் ஆட்சி செய்தார்.
6ம் பட்டம் அவரின் பொன்னுசாமி நாயக்கர் மதுரை அரசின் ஆணைக்கு கட்டுப்பட்டு கொத்தளங்களை காத்து பத்து வருடங்கள் ஆட்சி செய்தார்.
7ம் பட்டம் ரெகுராமமு சோத்தழ நாயக்கர் மதுரையில் திருமலை நாயக்கர் அரசராக இருந்தபோது அவரின் தளவாயான ராமபையன் இராமநாதபும் சேதுபதி மீது படையெடுக்கும் போது ரெகுராமமு சோத்தழ நாயக்கர் மற்றும் தவசிமடு படைகளையும் அழைத்துச் சென்று போர் செய்து வெற்றிப்பெற்றார் இதன் காரணமாக ரெகுராமமு சோத்தழ நாயக்கரை மதுரை அழைத்துச்சென்று வஸ்திரங்களும் பரிசுகளும் தந்து கௌரவித்து தவசிமடு அனுப்பிவைத்தார். மதுரை அரசின் ஆணைக்கு கட்டுப்பட்டு கொத்தளங்களை காத்து நாற்பத்திரண்டு வருடங்கள் ஆட்சி செய்தார்
8ம் பட்டம் சோத்தழ நாயக்கர் தான தர்மங்கள் செய்துக்கொண்டு மதுரை அரசின் ஆணைக்கு கட்டுப்பட்டு கொத்தளங்களை காத்து 40 வருடங்கள் ஆட்சி செய்தார்.
9ம் பட்டம் அவரின் மகன் ரெகுராமு சோத்தழ நாயக்கர் காலத்தில் சொக்கநாத நாயக்கர் தஞ்சாவூர் மீது படையெடுக்கும் போது ரெகுராமு நாயக்கரை கூடார காப்பாளராக நியமித்தார். கூடாரத்தை சிறப்பாக காத்ததாலும் போரில் வெற்றிப்பெற்றதாலும் மகிழ்ச்சி அடைந்த சொக்கநாத நாயக்கர் ரெகுராமு சோத்தழ நாயக்கரை மதுரை அழைத்துச்சென்று குமார வர்க்கம் என்னும் பெயர் கொடுத்து மேலும் வஸ்திரங்களும் பரிசுகளும் கொடுத்து சிறப்பு செய்து தவசிமடு அனுப்பிவைத்தார்.
10ம் பட்டம் அவரின் மகன் சோத்தழ நாயக்கர் மதுரை அரசின் ஆணைக்கு கட்டுப்பட்டு கொத்தளங்களை காத்து 33 வருடங்கள் ஆட்சி செய்தார்
11வது பட்டம் சோத்தழ நாயக்கரின் மகன் ரெகுநாத சோத்தழ நாயக்கர் தான தர்மங்கள் மிகு தியாக செய்துக்கொண்டு மதுரை அரசின் ஆணைக்கு கட்டுப்பட்டு கொத்தளங்களை காத்து 31 வருடங்கள் ஆட்சி செய்தார்.
12ம் பட்டம் ரெகுநாத சோத்தழ நாயக்கரின் மகன் சோத்தழ நாயக்கர் 19 வருடங்கள் மதுரை அரசின் ஆணைக்கு கட்டுப்பட்டு கொத்தளங்களை காத்து ஆட்சி செய்து வந்தார்.
![]() |
| தவசுமடை வரைப்படம் |
சோத்தழ நாயக்கர் பூர்வீக வரலாறு:-
![]() |
| குந்தி தேசம் |

| சோத்தழ நாயக்கரின் தபசு |

| சொக்கநாத நாயக்கர் |
9ம் பட்டம் அவரின் மகன் ரெகுராமு சோத்தழ நாயக்கர் காலத்தில் சொக்கநாத நாயக்கர் தஞ்சாவூர் மீது படையெடுக்கும் போது ரெகுராமு நாயக்கரை கூடார காப்பாளராக நியமித்தார். கூடாரத்தை சிறப்பாக காத்ததாலும் போரில் வெற்றிப்பெற்றதாலும் மகிழ்ச்சி அடைந்த சொக்கநாத நாயக்கர் ரெகுராமு சோத்தழ நாயக்கரை மதுரை அழைத்துச்சென்று குமார வர்க்கம் என்னும் பெயர் கொடுத்து மேலும் வஸ்திரங்களும் பரிசுகளும் கொடுத்து சிறப்பு செய்து தவசிமடு அனுப்பிவைத்தார்.
10ம் பட்டம் அவரின் மகன் சோத்தழ நாயக்கர் மதுரை அரசின் ஆணைக்கு கட்டுப்பட்டு கொத்தளங்களை காத்து 33 வருடங்கள் ஆட்சி செய்தார்
11வது பட்டம் சோத்தழ நாயக்கரின் மகன் ரெகுநாத சோத்தழ நாயக்கர் தான தர்மங்கள் மிகு தியாக செய்துக்கொண்டு மதுரை அரசின் ஆணைக்கு கட்டுப்பட்டு கொத்தளங்களை காத்து 31 வருடங்கள் ஆட்சி செய்தார்.
12ம் பட்டம் ரெகுநாத சோத்தழ நாயக்கரின் மகன் சோத்தழ நாயக்கர் 19 வருடங்கள் மதுரை அரசின் ஆணைக்கு கட்டுப்பட்டு கொத்தளங்களை காத்து ஆட்சி செய்து வந்தார்.

Comments
Post a Comment