ஆவலப்பன்பட்டி பாளையம் ;9


ஆவலப்பன்பட்டி பாளையப்பட்டு வரலாறு:-






ஆவலப்பன்பட்டி பாளைத்தின் வம்சாவழி குறித்த அரசு ஆவணத்தில் இருந்து எளிமைப்படுத்தி எழுதப்பட்டுள்ளது.





ஆவலப்பன்பட்டி 






ஆவலப்பன்பட்டின் பாளையக்காராகிய அவலப்ப நாயக்கர் வம்சம் குறித்தான வரலாறு என்னவென்றால்:-






ஆவலப்ப நாயக்கரின் பூர்வீக வரலாறு:-




முன்னொரு காலத்தில் வராக நாட்டில் யாதவ குலத்தில் உற்பத்தியான ஒன்பது கம்பளத்தில் தொட்டிய கம்பள சாதியில் உதித்து டில்லி பாதுஷ்ஷா சீமையை விட்டு ராயர் சமஸ்தானத்திற்கு வந்து குமார வர்க்கமாக பணியடைந்து பிரசித்தி பெற்ற குச்சிலி பொம்ப நாயக்கர் அவர்களின் பிள்ளைகளுள் இரண்டாம் பிள்ளையாகிய சோதேய நாயக்கர் வீரப்பராக்கிரமங்களை கண்டு வியந்து மகிழ்ச்சியடைந்து யார் யார் தெற்கு பகுதில் உள்ள கள்ளர்களையும் சில உபத்திரம் செய்யும் தீயவர்களையும் அடக்குகிறார்களோ அவரவர்கள் சீர் செய்த பகுதி அவர்களுக்கே வழங்கப்படும் என ராயர்உத்தரவிட்டார். அவ்வாறு கணவாயின் கீழ் உள்ள பிரதேசத்திற்கு சென்று கள்ளர்களையும், சில கயவர்களையும் அடக்கி வந்தார் சோதி நாயக்கர். ஆவலப்பன்பட்டி பாளையக்கரர்களின் முன்னோராகிய சோதி நாயக்கரின் இச்செயவால் மகிழ்ச்சியடைந்த ராயர் சோதி நாயக்கர் சீர் செய்த பகுதிகளை அவருக்கே தந்து மேலும் விருதுகளாக:-





பல்லாக்கு 





உபசாமரம் 



* பல்லாக்கு
* உபசாமரம்
* சுறுட்டி
* சூரியபாண அனுமந்த டால்
* மகர டால்
* கருட டால்
* பஞ்சவர்ண டால்
* சிவ சக்கிர டால்
* சந்திர காவி டால்
* பச்சை குடை
* ரணகமகண்
* ரணபாஷிக்கம்
* நிகளம்
* சாமதுரோகற வெண்டயம்
* வீர கட்டாமணி
* வீர வெண்டயம்
* கொத்து சறப்பணி
* முத்தொண்டி
* பச்சொட்டி
* கலிகிதுறாயி
* யானை மேல் அம்பாரி
* ஒட்டிகை மேல் பேறிகை
* குதிரை மேல் டக்கா
* எருது மேல் தம்மட்டம்




முதலான விருதுகளும் வாத்தியங்களும் தந்து குமார பட்டத்து சொதேய நாயக்கர் என பெயரும் கொடுத்து ஆனைமலைச் சரிவிலே நீ சீர் செய்த பாளையத்தை நீயே ஆண்டுக்கொள் என கூறி பட்டம் கட்டிவைத்து அனுப்பினார். ராயர் ஆணைப்படியே தெற்கு நோக்கி வந்து தாராபுரத்திற்கு கிழக்கு அமராவதிக்கு தெற்கு பொண்னூதிமலைக்கு அருகில் உள்ள காட்டில் சென்று இறங்கி காடுகளை திருத்தி பௌனார்முகலூறு என்ற ஊரையும் உருவாக்கிக் கொண்டு பாளையத்தை ஆண்டு வந்தார்.




பொன்னூதி மலை



இவரின் மகன் ஆவுல சொதேய நாயக்கர் காலத்தில் ராயரின் கட்டளைப்படி கள்ளர்களை அடக்கி ஆனைமலைக்கு கிழக்காக இருந்த பகுதியில் செடிகளை வெட்டி மக்களை குடியமர்த்தி அவ்வூருக்கு ஆவலப்பன்பட்டி என பெயரிட்டு ஆவலப்ப நாயக்கராக ஆண்டு வந்தார்






ஆவலப்பன்பட்டி பாளையக்கார வம்சாவழிகள்:-




அந்த நாள் முதல் சாலிவாகன சகாப்தம் 1318 முதல் 1715 வரையிலான 397 வருடங்கள் ஆவலப்ப நாயக்கரின் வம்சாவழிகள் பாளைத்தை ஆண்டு வந்தனர்.



குமார பட்டத்து சொதேய நாயக்கர் மூலனூரைதலைமையிடமாக கொண்டு பளையத்தை ஆண்டு வந்தார்.



1, அவுற சொதேய நாயக்கர் - (49 ஆண்டுகள் பட்டமிருந்தார்)

2, குமார சோதேய நாயக்கர் - (38ஆண்டுகள் பட்டமிருந்தார்)

3, பெரிய சோதேய நாயக்கர் -  (36 ஆண்டுகள் பட்டமிருந்தார்)

4, ஆவுல சொதேய நாயக்கர் -  (29 ஆண்டுகள் பட்டமிருந்தார்)

5, பங்காரு சோதேய நாயக்கர் -  (24 ஆண்டுகள் பட்டமிருந்தார்)

6, குமார பட்டத்து ஆவலப்ப நாயக்கர் -  (30 ஆண்டுகள் பட்டமிருந்தார்)

7, சோதே நாயக்கர் -  (19 ஆண்டுகள் பட்டமிருந்தார்)

8, தம்பி குமார பட்டத்து சோதேய நாயக்கர் -  (23 ஆண்டுகள் பட்டமிருந்தார்)

9, ராம சொதேய நாயக்கர் -  (35 ஆண்டுகள் பட்டமிருந்தார்)

10, நாகய சொதே நாயக்கர் -  (32 ஆண்டுகள் பட்டமிருந்தார்)

11, சின்ன சொதேய நாயக்கர் -  (27 ஆண்டுகள் பட்டமிருந்தார்)

12, வேலாயுத நாயக்கர் -  (18 ஆண்டுகள் பட்டமிருந்தார்)

13, குமார பட்டத்து சொதேய நாயக்கர் -  (15 ஆண்டுகள் பட்டமிருந்தார்)

14, ராய சொதேய நாயக்கர் -  (22 ஆண்டுகள் பட்டமிருந்தார்)







பேரரசுகளின் மேலாண்மையில் ஆவலப்பன்பட்டி பாளையம்:-





ராயர் சாமஸ்தானத்தில் ராயர் ஆட்சில் இருக்கின்ற காலத்தில் முகலுனூர், ஆவலப்பன்பட்டி என இரண்டு பளையப்பட்டுகளை இவர்கள் ஆண்டு வந்தனர்.




மதுரை நாயக்கர்கள் ஆட்சிக்காலத்தில் ஆவலப்பன்பட்டி மற்றும் முகலுனூர் ஆகிய இரு பளையங்களுக்கும் சேர்த்து வருடம் ஒன்றுக்கு வரியாக ராச கோபாலி 1350 பணம் என நிர்ணயிக்கப்பட்டதினால் இப்பணத்தை வருடந்தோறும் முறையாக செலுத்தி இந்த இரு பளையப்பட்டுகளையும் ஆண்டு வந்தனர்.





மைசூர் அரசு 



மைசூர் சமஸ்தானத்தின் ஆட்சிக்காலத்தில் ஆவலப்பன்பட்டி மற்றும் முகலுனூர் ஆகிய இரு பளையங்களுக்கும் சேர்த்து வருடம் ஒன்றுக்கு வரியாக ராச கோபாலி 1500 பணம் என நிர்ணயிக்கப்பட்டு இப்பணத்தை வருடந்தோறும் முறையாக மைசூர் அரண்மனைக்கு செலுத்தி இந்த இரு பளையப்பட்டுகளையும் ஆண்டு வந்தனர்.





இவ்வாறு வம்ச பாரம்பரியமாக அந்தந்த ஆட்சிக்காலத்துக்கு உட்பட்ட பேரரசின் அரண்மனைக்கு கட்டுப்பட்டு தவறாமல் வரி பாளையத்தை திப்பு சுல்தான் ஆட்சிக்காலம் வரை செழிப்பாக ஆண்டு வந்தனர்.




ஆங்கிலேயர்கள் ஆட்சிக்காலத்தில் 
பதினான்காம் பட்டக்காராகிய ராமசோத நாயக்கர் மறைந்த பிறகு அவரது அண்ணனுக்கு ஆனந்த வருஷத்தில் நாடூர் பளையத்தின் ஜமீனாக பட்டம் கட்டி  ஆவுல சோதேய நாயக்கர் என பெயரும் கொண்டு ஆவலப்பன்பட்டி பாளையத்திற்கு உட்டபட்ட பதினோரு கிராமங்களை வெள்ளையருக்கு வரி செலுத்திக் கொண்டு ஆண்டு வந்தார்.

Comments

Popular posts from this blog

மாம்பாறை பாளையக்காரர்

தாராபுரம் பாளையம் :6