மதுரை நாயக்கர்கள் வம்ச வாரலாறுகள்
மதுரை நாயக்கர் வரலாறு
" கொட்டியம் " பெயர்காரணம்:-
மதுரை நாயக்கர்களின் குடும்பப் பெயரான "கொட்டியம்" என்பதன் பொருள் சரக்கறை காவலர் மற்றும் கால்நடை பராமரிப்பவர் என்று பொருள்படும் "கொல்லவாரு இண்டி (வீட்டு) பேரு (பெயர்)" . கொல்லவார்கள் ஆதிகாலம் முதலே தன் இனத்திற்கென தங்கள் மந்தைகளில் உள்ள பசுக்களில் உள்ள ஒரு பசுவை புனித பசுவாக கொண்டு அவைகளை தங்கள் குல விழாக்களில் பங்குக்கொள்ள செய்து அதற்கு பூஜைகள் செய்வது வழக்கம். அது போல் விஜயநகர வம்சாவளிகளுக்கும் புனித பசுக்கள் உண்டு அவற்றை பராமரிப்பது உச்சபட்ச கௌரவமாக கருதப்பட்டது. இருப்பினும் அப்பொறுப்பு கொல்லவார்களான "கொட்டியம்" பரம்பரை ஏற்று செய்து வந்தது. "ஏசியாடிக் சொசைடி ஆப் தி கிரேட் பிரிட்டன் ( Asiatic society of the Great Britain) கூற்றுப்படி:- கிருஷ்ணதேவராயர் தனது விருப்பமான தளபதிக்கு மைசூர் சாம்ராஜ்ஜியத்தையும் (கொல்லவார்), தனது அரச பசுவை காப்பவரான நாகம நாயக்கருக்கு மதுரையையும் (கொல்லவார்), தனக்கு வெற்றிலை எடுத்து வருபவருக்கு தஞ்சாவூரையும் (காப்பு) கொடுத்தார் என்கிறது.
காசியப கோத்திரம்:-
கொல்லவார்களின் கோத்திரப் பெயர்களில் ஒன்றாக "காசியப மகரிஷி" கோத்திரம் திகழ்கிறது. இருப்பினும் காவல் கோட்டம் கூறும் தகவல் படிபொதுவாக வடுகர்களுக்கு வீட்டுப்பெயர் மட்டுமே உண்டு கோத்திரம் இல்லை. ஆனால் பிராமணர்களின் சம்பிரதாயத்தின் படி கோத்திரம் இல்லாமல் எந்தவித சடங்குகளும் மேற்கொள்ளமுடியாது. எனவே பிராமண சடங்குகளில் அதிக ஈடுப்பாடு கொண்ட இராணி மங்கம்மாள் காலத்தில் பிராமணர்கள் " கோத்திரம் தெரியாதவர்களுக்கு காசியப கோத்திரம் " என்னும் வேத மொழியின் படி மதுரை நாயக்கர்களுக்கு காசியப கோத்திரத்தை பிராமணர்கள் வழங்கினார்கள் என்ற கூற்று உண்டு. எனவே கோத்திரங்கள் கொல்லவார் மத்தியில் பிற்காலத்தில் தோன்றி இருக்கக்கூடும். மேலும் மங்கம்மாள் காலத்திற்கு முந்தைய மதுரை நாயக்கர்களின் கல்வெட்டுக்கள், செப்பேடுகள் மற்றும் பாளையக்காரர்களுக்கு வழங்கிய உரிமை சாசனம் உள்ளிட்ட எதிலும் காசியப கோத்திரம் என்ற சொல் இடம்பெறவில்லை மாறாக "கொட்டியம்"என்னும் மதுரை நாயக்கர்களின் வீீீட்டுப்பெயரே இவை அனைத்திலும் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
நாகம நாயக்கர்:-
நாகம நாயக்கர் கிருஷ்ணதேவராயரின் தந்தையான நரச நாயக்கருக்கும் முன்பே தேவகரியை சுல்தான்கள் கைப்பற்றி வெறியாட்டம் ஆடியதையும், அவர்களை எதிர்த்த கொல்லவார்களின் இரத்தம் துங்கபத்திரையில் ஆறாக ஓடியதையும் தன் சிறுவயதில் கண்ணால் கண்டவர். இதன் விளைவாக விஜயநகரபடையில் இணைந்து வாள் ஏந்தி குதிரை ஏறிய அவர் தன் முதுமை காலம் வரை இறங்கவே இல்லை. மேலும் பல போர்களில் ஈடுபட்டு விஜயநகரத்திற்கு வெற்றிக்கனிகளை பறித்துத் தந்த வீரத்தழும்பேறிய மகா வீரர். நரச நாயக்கர் இறந்த பிறகு கிருஷ்ணதேவராயரை சந்திரகிரி கோட்டையில் வைத்து தனது மூத்த மகன் போல் வளர்த்தவரும், அவரை அரியணையில் அமரவைத்து பாதுகாத்தவரும் இவரே. விஜயநகர அரசிகள் தங்கள் குலமான காப்பு இன மக்களை விஜயநகரத்தின் உயர் பதவியில் அமர்த்தியதால் விஜயநகர பேரரசை உருவாக்க இரத்தம் சிந்திய கொல்லவார் இனமக்கள் அரசில் செல்வாக்கு இழந்தனர். இதைப்பற்றி அரசரிடம் கூறியும் பயனில்லை. இதனால் பெரும் கவலை உற்ற நாகமர் கொல்லவார்களுக்கென ஒரு தனி அரசை உருவாக்க சபதம் ஏற்று அதற்குறிய காலத்தை எதிர்நோக்கி காத்திருந்தார்.
மதுரை கலகமும் மதுரை நாயக்க அரசு உதயமும்:-
மதுரையில் குமாரகம்பணர் காலத்தில் அமர்த்தப்பட்ட பாண்டிய மன்னர்களின் ஆட்சியில் தொடர்ந்து குழப்பங்கள் நீடித்தது. பாண்டிய அரசை எதிர்த்து 12 மலபார் குறுநில மன்னர்கள் மதுரையை கைப்பற்ற கலகங்கள் செய்தனர் .மேலும் பாண்டிய மன்னருக்கு எதிராக தங்களை சோழ மரபினர் எனக்கூறி வந்த சில குறுநில மன்னர்களும் அரசிற்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்டனர்.
இதனால் பாண்டிய மன்னரால் சரிவர ஆட்சி செய்யவும், விஜயநகரத்திற்கு கப்பமும் செலுத்த முடியவில்லை. மேலும் பாண்டிய மன்னர்களுக்கு எதிரான கிளர்ச்சியாளர்கள். பல இடங்களில் பண்டிய அரசின் கோட்டைகளை கைப்பற்றி அச்சுறுத்தி வந்தனர். நிலமை கைமீறிப்போனதால் பாண்டிய மன்னன் விஜயநகர பேரரசர் கிருஷ்ணதேவராயர் உதவியை கோரினார். எனவே மதுரையில் ஏற்பட்ட கலகத்தை அடக்க சந்திரகிரியில் இருந்த பல போர்களில் ஈடுபட்டு வெற்றிவாகை சூடிய தென்னக மகாமண்டலேசுவரர் கொட்டியம் நாகம நாயக்கரை பணிந்தார்.
ராயரின் கோரிக்கையை ஏற்று நாகம நாயக்கர் விஜயநகர பெரும் படைகளுடன் மதுரைக்கு கலகத்தை அடக்க புறப்பட்டார். கொல்லவாருக்கானதனி நாட்டை உருவாக்க இது தான் சரியான தருனம் என்பதை உணர்ந்தார். மதுரை சென்ற நாகமர் சோழனையும், மலபார் மன்னர்களையும் அடக்கிவிட்டு பாண்டியனிடம் மதுரை ஒப்படைக்காமல் தானே மதுரையை கைப்பற்றிக்கொண்டு பாண்டிய மன்னன் கூன் பாண்டியனை விரட்டினார். சந்திரசேகர பாண்டியன்கிருஷ்ணதேவராயரிடம் மதுரையில் நடப்பதை ஓலையாக எழுதி அனுப்பினார். நடந்ததை அறிந்த ராயர் நாகமர் மீது கோபமுற்றார் நாகமரை கைது செய்து அழைத்து வர தனது வீரர்களுக்கு ஆணையிட்டார். ஆனால் நாகமர் மீது இருந்த மதிப்பினால் யாரும் முன்வரவில்லை இறுதியாக ஒரு இளைஞன் முன்வந்தான் அவர் தான் கொட்டியம் விஸ்வநாத நாயக்கர் நாகமரின் மகன். விஸ்வநாதனின் இத்தகு சொல் ராயரையும் ஆவையில் இருந்த அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. ராயர் விஸ்வநாதனை கண்டு பெருமிதம் கொண்டார் மேலும் பெரும் படையை விஸ்வநாதன் தலைமையில் மதுரைக்கு ராயர் அனுப்பி வைத்தார். மதுரை வந்த விஸ்வநாதன் படைக்கு கூன் பாண்டியன் பெரும் வரேவற்பு அளித்தான். கலத்தில் இறங்கிய விஸ்வநாதன் முதலில் தம்மைய நாயக்கரை நாகமரிடம் தூது அனுப்பினார்.
தூது வந்த தம்மைய நாயக்கர் நாகம நாயக்கரை கலகம் செய்வதை விடுத்து விஜயநகரம் திரும்புமாறு கேட்டுக்கொண்டார். இச்செய்தியால் கோபமுற்ற நாகமர் தம்மையாவை கைது செய்து சிறையில் அடைத்தார். சிறையில் இருந்த தம்மைய நாயக்கர் உண்ணா நோன்பு இருந்து உயிர் இழந்தார். இதன் காரணமாக சினம் கொண்ட விஸ்வநாத நாயக்கர் தனது தந்தையான நாகமர் மீது போர் தொடுத்தார். போரின் இறுதியில் நாகமரை கைது செய்து விஜயநகரம் அழைத்துச் சென்று ராயர் முன் நிறுத்தினார் விஸ்வநாதர். நாகமருக்கு மரண தண்டனை நிறைவேற்ற ராயர் ஆணையிட்டார் மீண்டும் யாரும் முன்வரவில்லை. என்ன ஆச்சர்யம் ராயரின் உத்தரவை நிறைவேற்ற விஸ்வநாதவன் தன் தந்தையை கொல்ல முன்வந்தான். நாகமரின் தலையை துண்டிக்க தன் உறையில் இருந்த வாளை உருவி நாகமரின் தலையை துண்டிக்க வாளை மேல் ஓங்கினான் அந்த கணத்தில் "நில்" என்ற ராயரின் குறள் விஸ்வநாதனை தடுத்தது. விஸ்வநாதன் தனக்கு விஸ்வாசமாக இருப்பதை எண்ணி ராயர் மனம் மகிழ்ந்து ராயர் நாகமரை விடுதலை செய்து மதுரையை விஸ்வநாதனுக்கே ஆளக்கொடுத்தார்.
மதுரை அரசனாக விஸ்வநாதர் முடிசூடுதல்:-
1 ஜனவரி 1520 விஜயநகரமே விழா கோலம் பூண்டது. விஸ்வநாதனுக்கு மதுரை அரசனாக முடி சூட்டும் விழா ராயரால் ஏற்பாடு செய்யப்பட்டது. கங்கைமற்றும் அனைத்து புண்ணிய நதிகளிளும் இருந்து எடுத்து வரப்பட்ட புனித நீர் விஸ்வநாதனின் தலையில் ஊற்றப்பட்டது. தங்கத்தால் ஆன கிரிடம் விஸ்வநாதருக்கு வைக்கப்ட்டது. அவரது காதுகளை முத்து மற்றும் பவளம் பதித்த ஆபரணம் அலங்கரித்தது. தங்க நகைகள் அணிவிங்கப்பட்டது. மேதிரங்கள் தங்கக்காப்புகள் விஸ்வநாதரின் கைகளை அலங்கரித்தது. பெரிய யானை மீது சிம்மாசனம் அமைத்து விஸ்வநாதரை அமரவைத்து வெள்ளிக்குடை அமைத்து கிருஷ்ணதேவராயர் தனது அரச முத்திரையையும் கருடன் மற்றும் ஹனுமனின் உருவம் பொறித்த கேடயத்தையும் விஸ்வநாத நாயக்கருக்கு அளித்து படைவீரர்களுடன் நகர் வளம் வரச் செய்தார். இறுதியாக ஊர்வலம் ராயர் அரண்மனையை அடைந்தது அங்கு விஸ்வநாதருக்கு பால்சோறு பரிமாறப்பட்டது. பிறகு விஸ்வநாத நாயக்கர் மதுரைக்கு சென்று மதுரை மதுரை மாநகர் முழுவதும் வளம் வந்தால் அன்று முதல் 9 தலைமுறையாக கிருஷ்தவ ஆண்டு 1529ல் இருந்து 1726 வரை மதுரையை நாயக்கர் பேரரசு ஆண்டது என்பது குறிப்பிடத்தக்கது.
கொட்டியம் விஸ்வநாத நாயக்கர்:-
விஸ்வநாதர் மதுரை வந்தடைந்த போது அவரை அவ்வூர் மக்களும், படைத்தலைவர்களும் மகிழ்ச்சியுடன் வரவேற்றனர். யானை மீதேறி வலம் வந்த விஸ்வநாதர் மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்திற்கு தன் தந்தை நாகமருடன் சென்று இறைவனை வணங்கி ஆசி பெற்றார். நாகமர் தனது மகனை பெருமிதத்துடன் நெற்றியில் முத்தமிட்டார். பின்பு பாண்டியனின் மணிமுடியை சூடி மதுரையின் அரசனாக அரியணை ஏறினார் விஸ்வநாத நாயக்கர். திருச்சியிலும், மதுரையிலும் பெரிய கோட்டைகளை எழுப்பினார். தனக்கு உதவியாக அறிவுக்கூர்மை மிகுந்த அரியநாத முதலியாரை அமைச்சராகவும், தளவாயாகவும் நியமித்து மன்னருக்கு வெற்றிலை மடித்து தரும் உரிமையும் அவருக்கு வழங்கப்பட்டது.
விஸ்வநாதர் தனது ராஜ்ஜியத்தை 72 பாளையங்களாக பிரித்து அதில் பெரும்பாலானவற்றை கம்பளத்தாருக்கும். மற்றவை தெலுங்கு வன்னியர், மறவர் போன்ற சமுக மக்களுக்கு வழங்கினார். தன்னை எதிர்த்து வந்த பஞ்ச பாண்டியர்களை எளிதாக ஒடுக்கினார். மதுரை நாயக்க பேரரசு சிறப்பாக ஆட்சி செய்ய வலுவான அடித்தளம் அமைத்தவர் விஸ்வநாத நாயக்கர் ஆவார்.
விஸ்வநாத நாயக்கரின் சிறப்புகள்:-
அவர் வாழ்ந்த காலத்தில் அவர் மிகுந்த அழகுடையவராக இருந்தார். இயக்கையாகவே உடல் வலிமை மிக்கவராகவும், உலக ஞானம் கொண்டும் விளங்கினார். காசி முதல் இராமேஸ்வரம் வரையிலான வழித்தடங்களில் பக்தர்கள் தங்கிச்செல்வதற்காக யாத்திரிகர் சத்திரங்களை அமைத்துத்தந்தார்.
கொட்டியம் குமார கிருஷ்ணப்ப நாயக்கர்:-
இவர் விஸ்வநாத நாயக்கரின் மகன் அரியநாத முதலியார் அரவணைப்பில் தனது தந்தையின் மரணத்திற்கு பிறகு அரியணை ஏறி ஆட்சி செய்தார். தன் தந்தையின் வழியை பின்பற்றி ஆட்சி செய்தார்.
தும்பிச்சி நாயக்கரின் கலகம்:-
இவர் காலத்தில் மதுரை படைகள் விஜநகரத்திற்கு ஆதவாக சென்றிருந்த சமயத்தில். 72 பாளையங்கள் பிறித்து வழங்கப்பட்டதில் மதுரையின் மீது மனக்கசப்பு கொண்டிருந்த பரமக்குடியின் பளையக்காரராகவும் சில்லவார்களின் தலைவராகவும் இருந்த தும்பிச்சி நாயக்கர் மதுரை எதிர்த்து படைத்திரட்டினார். இப்படையில் மறவர் படையும், தும்பிச்சி நாயக்கருக்கு ஆதரவான படையும், சிங்களர் படையும் போர்சுகியர்களின் உதவியோடு. மதுரையின் மீது படையெடுத்தனர். தன் இனத்தவரை தனக்கு எதிராக தூண்டிவிடும் போர்ச்சுகியரின் சூழ்ச்சி என்பதை உணர்ந்த மதுரை மன்னர். கலகத்தை ஒடுக்கினார். கலகத்தில் ஈடுப்பட்ட தும்பிச்சி நாயக்கரின் தலை துண்டிக்கப்பட்டனர். மேலும் பரமக்குடி கோட்டையில் துப்பாக்கியுடன் இருந்த 17 போர்சுகியர்களும் கைது செய்து கொல்லப்பட்டனர். பின்னர் கலகத்தில் பங்கெடுத்த இலங்கை மீதும் படை எடுத்து வெற்றி வாகை சூடினார் மதுரை மன்னர்.
ஒரு நாள் திருநெல்வேலி வழியாக சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது தனது தந்தை மரணம் அடைந்த இடத்தை கண்டார். தந்தை மீது மிகுந்த அன்பு கொண்டிருந்ததால் துயரம் தாளாது தனது 46ம் வயதில் மரணமடைந்தார். இவர் நினைவாக ஆக்ரஹாரம் அல்லது கல்லரை அமைத்து பிராமணர்களுக்கு தானமாக வழங்கப்பட்டது.
கொட்டியம் வீரப்ப நாயக்கர்:-
தனது தந்தை மரணம் அடைந்த போது இளைய பருவம் அடைந்த துடிப்புள்ள இளைஞனாக இருந்தார். மதுரையின் அரியணையில் அமர்ந்து 22 வருடங்கள் ஆட்சி செய்து பின் மரணமடைந்தார்.
கொட்டியம் இரண்டாம் கிருஷ்ணப்ப நாயக்கர்:-
இவர் ஆட்சிக்காலத்தில் சிறப்பான நிகழ்வுகள் எதுவும் பதிவு செய்யப்படவில்லை.
கொட்டியம் முத்துக்கிருஷ்ணப்ப நாயக்கர்:-
இவர் ஆட்சிக்காலத்தில் எதுவும் பதிவு செய்யப்படவில்லை.
கொட்டியம் முத்து வீரப்ப நாயக்கர்:-
முத்து வீரப்ப நாயக்கர் இராமேஸ்வரம்இராமநாதசுவாமி கோவிலுக்கு செல்லும் பக்தர்களிடம் வழிப்பறி செய்து துன்புறுத்தி வந்த கள்ளர்களை ஒடுக்கினார். கள்ளர்களை அடக்க உதவிய மறவர்களுக்கு இராமநாதபுரம் பாளையத்தை வழங்கி கோட்டை கட்டிக்கொள்ள அனுமதி வழங்கினார். மேலும் அவர்களுக்கு "சேதுபதி" என்ற பட்டத்தை வழங்கி சிறப்பித்தார்.
கொட்டியம் திருமலை நாயக்கர்:-
மதுரை நாயக்க மன்னர்களில் மிகவும் சிறப்பித்து கூறப்படுபவர் திருமலை நாயக்கர். இவர் 9 பிப்ரவரி 1626ல் தனது தந்தை முத்து வீரப்ப நாயக்கருக்கு பிறகு மதுரை மீனாட்சி அம்மனிடம் ஆசி பெற்று அறியணை ஏறினார். இவர் இசை மீதும் நாட்டியம் மீதும் அதீத காதல் கொண்ட கலா ரசிகர். நல்லிரவு வரை கூட இசை,நடனம் முதலிய நிகழ்வுகளை காண்பார். அவர் எப்போது வெற்றிலை போடுகிறாறோ அப்போது தான் சபை கலையும்.
தஞ்சை நாயக்கர்களுடனான கொடுப்பினை:-
திருமலை நாயக்கர் அரியணை ஏறிய மறுநாள் காலை தஞ்சை நாயக்க அரசர் விஜய ரகுநாத நாயக்கரின் தூதுவன் திருமலை மன்னரிடம் ஒப்பந்தம் செய்ய தூது வந்தான் அதன் படி திருமலை மன்னருக்கு வல்லம் கோட்டையை வழங்குவதாகவும் அதற்கு பிரதிபலனாக திருச்சியை தஞ்சை அரசிற்கு வழங்கவேண்டும். மேலும் ரகுநாத நாயக்கரின் தங்கையான பார்வதியை திருமலை நாயக்கருக்கு மணம் முடித்து தருவதாகவும் தஞ்சை மற்றும் மதுரை மன்னர்களுக்கிடையே ஆன ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
திருமலை நாயக்கர் தஞ்சை இளவரசியின் திருமணம்:-
மதுரையில் கோலாகலமாக திருமலை மன்னரின் திருமண விழா ஏற்பாடு செய்யப்பட்டது. மதுரையின் தெருக்கள் எங்கும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டது. இராஜ அலங்காரத்துடன் திருமலை நாயக்கர்மணமேடையில் வீற்றிருந்தார். அழகிய இளவரசி பார்வதியை தஞ்சை மன்னரின் உறவினர்கள் திருமலை மன்னரின் அருகில் அழைத்து வந்தனர். அன்று சொக்கநாதனுக்கு மினாட்சியை திருமால் மணம்முடித்து கொடுத்து போல தங்கயின் கைபிடித்து திருமலை மன்னரின் கையில் சேர்த்தார். வேத விற்பணர்களின் மந்திரங்கள் முழங்க இளவரசி பார்வதி திருமலை நாயக்கரின் மனைவி ஆனார். மதுரையில் கதிரவன் மறைந்து இருள் கவ்வ நினைத்தாலும் மதுரையில் வீதி எங்கும் ஒளிரவிடப்பட்ட விளக்குகள் இருளை தகர்த்தன. அந்த விளக்கொளியில் திருமலை நாயக்கரும் அரசியும் யானை மீது அமர்ந்து நகர் வளம் வந்தனர். தெருவெங்கும் மக்கள் ஆரவாரம் செய்தனர். வாழ்த்து கோஷம் விண்ணை பிளந்து தேவலோகம் வரை சென்றது. தம்பதிகள் அரண்மனை திரும்பியதும் தஞ்சை நாயக்கர்கள் சார்பில் பெரும் சீர்வரிசைகள் சீதனமாக கொடுக்கப்பட்டது.
அரியநாத முதலியார் இறப்பு:-
திருமலை நாயக்கரின் திருமணம் முடிந்த மூன்றாம் நாள். திருமலை நாயக்கரின் காதுகளில் ஒரு துயர செய்தி எட்டியது. அது மதுரையின் தலைமை அமைச்சர் மற்றும் தாளவாயாகவும் விஸ்வநாத நாயக்கர் காலம் முதல் மதுரை மன்னர்களை வழிநடத்தியவருமான அரியநாத முதலியார் இறந்துவிட்டார் என்ற செய்தி. திருமலை நாயக்கர் ஆணையின்படி மிகுந்த அரச மரியாதைகளோடு இறப்பு சடங்குகள் செய்து அரியநாதர் உடல் அடக்கம் செய்யப்பட்டது. புதிய அமைச்சராக பொறுப்பேற்ற விடியப்பாவிற்கு அரியநாதரின் வலது கைவிரல் மோதிரத்தையும். தளவாயாக பொறுப்பேற்ற ராமபையனுக்கு அரியநாதரின் இடது கைவிரல் மோதிரத்தையும் எடுத்து திருமலை நாயக்கர் அணிவித்து அவர்களுக்கு பணி நியமனம் வழங்கினார்.
மதுரையின் படை மற்றும் பொருளாதாரம்:-
புதிதாக நியமிக்கப்பட்ட தளவாய் மற்றும் தலைமை அமைச்சர் இணைந்து பணியாற்றி மதுரை அரசின் படை வலிமை மற்றும் வருவாய்களை கணக்கெடுத்தனர். அதன்படி மதுரையில் நான்காயிரம் குதிரைப்படை, மற்றும் மற்றும் யானை படைகளும் 72 பாளையக்காரர்கள் கட்டுப்பாட்டில் 60,000 காலாட்படை வீரர்களும் இருந்தனர். இதை ஒழுங்குப்படுத்தி மதுரை கோட்டைக்கு வெளியில் குதிரை படைகள் மற்றும் கோட்டையின் 72 கோபுரங்கள் மீது வீரர்கள் நிறுத்தபட்டன.
மதுரையின் வருவாய் பொருத்தவரை 44 லட்சம் சக்கரங்கள். இதில் நான்கு லட்சத்தை கோவில்கள் சீரமைப்பு, பிராமணர்கள் ஊதியம் மற்றும் ஏழை எளிய மக்களுக்கு உதவ ஒதுக்கப்பட்டது.
மூன்று லட்சத்தை வீரர்களின் ஊதியத்திற்காகவும், ஒரு லட்சம் திருமலை நாயக்கர் செய்யும் தர்மங்களுக்காகவும் மீதம் உள்ள முப்பத்து நான்கு லட்சம் மக்களின் நலத்திட்டத்திற்காக அரசு கஜானாலில் நிரப்பப்பட்டது.
திருமலை நாயக்கர் தனது மாமன் மகள்களை மணந்து கொள்ளுதல்:-
தஞ்சை இளவரசியான பார்வதி நோய்வாய் பட்டு இறந்தார். இதன் காரணமாக திருமலை நாயக்கரின் தாய்வழி மாமன்கள் இருவர் ஒருவருக்கு இரண்டு மகள்கள் மற்றொருவருக்கு ஒரு மகள் என இவர்கள் தங்கள் மகள்களை திருமலை நாயக்கருக்கு திருமணம் செய்து வைத்தனர். திருமணம் முன்ப நடந்ததை போலவே சிறப்பாக நடந்தது.
இராமநாடு சேதுபதிக்கு தண்டனை வழங்குதல்:-
இராமநாதபுரம் சேதுபதி இராமநாதபுரம் பாளையத்தை தனி நாடாக பிரகடனம் செய்ய முயன்றார். இதனால் கோபமுற்ற திருமலை மன்னர் தளவாய் இராமபையனை அனுப்பி சேதுபதியை கைது செய்து வர உத்தரவிட்டார். முதலில் சேதுபதி தப்பித்து தலைமறைவானார் பிறகு தனது மருமகன் மூலமாக சில பாளையக்காரர்கள் மற்றும் மைசூரிடம் சென்று மதுரை மீது போர் தொடுக்குமாறு கோரினார். இருப்பினும் ராமபையன் மனம் தளறாது பாளையக்காரர்களையும், மைசூரையும் அடக்கி அவர்களுக்கு 20 லட்சம் பக்கோடாக்கள் அபராதம் விதிக்கப்பட்டது பிறகு சேதுபதியை கைது செய்து மன்னர் முன் நிறுத்தினார். இருப்பினும் சேதுபதியின் மருமகன் நாக தேவதை யாகம் செய்ததன் விளைவாக ராமபையனின் தொடையில் பெரும் வலி ஏற்பட்டது. எனவே ராமபையன் கருட யாகம் செய்ததால் சேதுபதியின் மருமகன் மரணம் அடைந்தார். பிறகு நோயால் ராமபையன் காலமானார். பின்பு திருமலை நாயக்கர் சேதுபதியை மன்னித்து விடுதலை செய்து மீண்டும் இராமநாதபுரத்தை தந்து கௌரவித்தார். இதற்கு விஸ்வாசமாக மூக்கறுப்பு போரில் மைசூரை வீழ்த்த திருமலை நாயக்கருக்கு சேதுபதி உதவினார். எனவே திருமலை நாயக்கர் மதுரையில் விழா வைத்து சேதுபதியை கௌரவித்து அவருக்கு "திருமலை சேதுபதி" என்னும் பட்டத்தை வழங்கி சிறப்பித்தார்.
திருமலை நாயக்கர் மகால்:-
மதுரை அரண்மனையும் கோவிலும் அருகருகில் இருப்பதனால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. மேலும் மீனாட்சி அம்மனே மன்னர் கனவில் தோன்றி புதிய அரண்மனை கட்ட உத்தரவிட்டாள்
இதன்காரணமாக கலைநயமிக்க திருமலை நாயக்கர் மகால் மதுரையில் மன்னரால் பல சிற்ப மற்றும் கட்டிடக்கலை கலைஞர்களை கொண்டு மிகப்பிரம்மாண்டமாக கட்டப்பட்டது.
திருமலை நாயக்கரின் குணதிசையங்கள் மற்றும் இறப்பு:-
திருமலை நாயக்கர் கிருஷ்ணரின் வரலாற்று காவியமான பாகவதத்தை விரும்பி படிப்பார். தான் ஒரு விஷ்ணு பக்தர் என்பதில் பெருமிதம் கொண்டவர். பல கோவில்களுக்கு திருப்பணிகள் செய்தான். அனைவரையும் எளிதில் மன்னிக்க கூடியவர். கலைநயம் மிக்கவர். எப்பொழுதும் மகிழ்ச்சியை விரும்புபவர். இப்படி பரிபூரணமாகவாழ்ந்து முகத்தில் ஆனந்தத்துடனே மறைந்தவர் திருமலை நாயக்கர்.
கொட்டியம் இரண்டாம் முத்து வீரப்ப நாயக்கர்:-
இவர் திருமலை நாயக்கரின் மகன் நான்கு மாதங்கள் மட்டுமே ஆட்சி செய்து காலமானார்.
கொட்டியம் சொக்கநாத நாயக்கர்:-
தஞ்சாவூர் மற்றும் மைசூர் மீதான படையெடுப்பு:-
சொக்கநாத நாயக்கர் தஞ்சை நாயக்கரான விஜயரகுநாத நாயக்கரின் பேத்தியான மங்கம்மாளை மணம் புரிய விரும்பினார். ஆனால் அதை தஞ்சை அரசர் மறுக்கவே மதுரை தஞ்சை மீது போர் தொடுத்தது. அதே சமயத்தில் மைசூர் மதுரையை சூழ்ந்தது. இத்தகைய இக்கட்டான நிலையில் சொக்கநாத நாயக்கர் முதலில் தஞ்சையை கைபற்றி மங்கம்மாளை சிறையெடுத்தார். பின்பு தனது தலைநகரை மதுரையில் இருந்து திருச்சிக்கு மாற்றினார். மதுரை நகர் முழுவதும் அடைக்கப்பட்டது மைசூர் வீரர்கள் மதுரையில் வசமாய் சிக்கிக்கொண்டனர். நான்கு மாதங்கள் மதுரையில் அடைக்கப்பட்டிருந்தனர். இறுதியாக மைசூர் படை உணவு நீர் இன்றி வாடினர். பிறகு அவர்கள் ஊர் திரும்பினால் போதும் என்ற நிலையில் மதுரை நகரை சொக்கநாதரிடம் ஒப்படைத்து விட்டு தோல்வியுடன் மைசூர் திரும்பினர்.
சொக்கநாதர் மங்கம்மாள் திருமணம்:-
சிறையெடுக்கப்பட்ட மங்கம்மாளை சொக்கநாதர் திருமணம் செய்து மதுரையின் அரசி ஆக்கினார். ஒருநாள் சொக்கநாதர் உறங்கும்போது படுக்கையில் இருந்து ஒரு ராஜநாகம் வெளிப்பட்டது எனவே அரண்மனை சோதிடர்களை கலந்து ஆலோசித்துவிட்டு தலைநகரை மதுரையில் இருந்து திருச்சிக்கு மாற்றினார்.
கொட்டியம் கிருஷ்ணரங்க முத்து வீரப்ப நாயக்கர் (மங்கம்மாள் கட்டுப்பாட்டில் ஆட்சி):-
சொக்கநாத நாயக்கர் மங்கம்மாளின் மகன் தனது 16வது வயதில் தனது தாயின் கட்டுப்பாட்டில் ஆட்சி செய்தார். தனது இளம் வயதிலேயே பாகவதத்தின்சுலோகங்களை மனப்பாடமாக கூறுவார். மிகுந்த அறிவாற்றல் மிக்கவர். அந்நியகோட்டைகளுக்குள் மாறுவேடத்தில் நுழைந்து தான் வந்ததற்கு அடையாளமாக தனது மோதிரத்தை அங்கே விட்டுச் செல்வது அவரது வழக்கம். டெல்லி முகலாயர் தனது காலணியை அனைத்து ராஜ்ஜயத்திற்கும் அனுப்பி மரியாதை செய்ய கூறுவார் ஆனால் மதுரை நாயக்கர் அந்த காலணி தனது காலில் அணிந்து அவமரியாதைகள் செய்து அனுப்பினார். பிறகு 8வருடங்கள் ஆட்சி செய்து இளம் வயதிலேயே காலமானார்.
கொட்டியம் விஜயரங்க சொக்கநாத நாயக்கர் (மங்கம்மாள் கட்டுப்பாட்டில் ஆட்சி):-
மங்கம்மாள் தனது மகன் இறக்கும் போது அரசியின் வயிற்றில் 8மாத குழந்தையாக இருந்த பேரன் பிறந்ததும் தன் மகனே மீண்டும் பிறந்ததாக எண்ணி மங்கம்மாள் பெரு மகிழ்ச்சி அடைந்து பிராமணர்களுக்கு தங்க, வெள்ளி நாணயங்களை தானமாக வழங்கினார்.
மங்கம்மாளின் குணாதிசையங்கள்:-
மங்கம்மாள் பெண்ணாக பிறந்தாலும் வீரத்தில் ஆண்களுக்கு சலிக்காத வீர மங்கையாக விவேகம், தாய்மை, வீரம் முதலிய குணாதிசயங்களை ஒருங்கே கொண்டவர். இறைபக்தி மிகுந்தவர் ஆலய திருப்பணிகள், சத்திரங்கள் கட்டுதல், கோவிலுக்கு குளம் வெட்டுதல், அன்னதானம் இடுதல் முதலிய அற காரியங்களை மேற்கொண்டார்.
திருச்சியை கைபற்றிய துருக்கியரை ஒடுக்குதல்:-
எதிர்ப்பாராத விதமாக திருச்சி கோட்டையை துருக்கியர்கள் கைப்பற்ற முனைந்தனர். அப்போது அங்கிருந்து சென்ற தமிழ் பதிவாளர் ஒருவர் மதுரை சென்று நாயக்க படைவீரர்களை அழைத்து வந்து துருக்கியரை மூர்கதனமாக தாக்கி அவர்களது தலைகளை கொய்தனர்.
இராணி மங்கம்மாள் மரணம்:-
விஜயரங்கன் தனது தளவாய் மற்றும் அமைச்சரின் வஞ்சக உரையை கேட்டு தனது பாட்டியான மங்கம்மாளை வீட்டு சிறையில் அடைத்தார். வீட்டு சிறையில் உண்ணா நோன்பிருந்த மங்கம்மாள் 40ம் நாள் தன் உயிர்நீத்தார்.
விஜயரங்கரின் மலபார் படையெடுப்பு:-
மலபார் மன்னர்களை வெற்றி கொண்ட விஜயரங்க நாயக்கர். அவர்களை வரி செலுத்தும்படி செய்தார். பின்பு இராணி மீனாட்சியை திருமணம் செய்தார். தனது இனத்திலேயே மூன்று பெண்களை திருமணம் செய்தார். இருப்பினும் குழந்தை பேரு இல்லாமல் 41 வருடம் ஆட்சி செய்துவிட்டு இறந்துபோனார்.
இராணி மீனாட்சி:-
இராணி மீனாட்சி தனது உயிரிழந்த கணவர் மூலமாக ஆட்சி உரிமையை பெற்ற விதவை அரசி. தங்க கிரிடமும் தங்க வளையலும் அணிந்து அரியணை ஏறினார். இவரை பதவி இறக்க மந்திரிகள் மற்றும் தளவாய்கள் பல சதிகளையும் சூழ்சிகளையும் செய்தனர். இறுதியாக சந்தா சாகிப்தலையிட்டு மதுரை மற்றும் திருச்சியை கைப்பற்றினார். இதனால் இராணி மீனாட்சி மனமுடைந்து தற்கொலை செய்துக்கொண்டார். மதுரை நாயக்க பேரரசு முடிவிற்கு வந்தது.
மதுரை நாயக்கர் பேரரசின் மன்னர்கள்:-
![]() |
| மதுரை நாயக்கர் (கொல்லவார்) |
" கொட்டியம் " பெயர்காரணம்:-
![]() |
| " கொட்டியம் " பொருள் |

| கொட்டியம் பரம்பரை |

| கொல்லவார் தலைவர் நாகம நாயக்கர் |

திரைப்படம் வாயிலாக காண கீழே செடுகவும்
மதுரை அரசனாக விஸ்வநாதர் முடிசூடுதல்:-
![]() |
| மதுரை கோவிலில் உள்ள விஸ்வநாதரின் சிலை |
1 ஜனவரி 1520 விஜயநகரமே விழா கோலம் பூண்டது. விஸ்வநாதனுக்கு மதுரை அரசனாக முடி சூட்டும் விழா ராயரால் ஏற்பாடு செய்யப்பட்டது. கங்கைமற்றும் அனைத்து புண்ணிய நதிகளிளும் இருந்து எடுத்து வரப்பட்ட புனித நீர் விஸ்வநாதனின் தலையில் ஊற்றப்பட்டது. தங்கத்தால் ஆன கிரிடம் விஸ்வநாதருக்கு வைக்கப்ட்டது. அவரது காதுகளை முத்து மற்றும் பவளம் பதித்த ஆபரணம் அலங்கரித்தது. தங்க நகைகள் அணிவிங்கப்பட்டது. மேதிரங்கள் தங்கக்காப்புகள் விஸ்வநாதரின் கைகளை அலங்கரித்தது. பெரிய யானை மீது சிம்மாசனம் அமைத்து விஸ்வநாதரை அமரவைத்து வெள்ளிக்குடை அமைத்து கிருஷ்ணதேவராயர் தனது அரச முத்திரையையும் கருடன் மற்றும் ஹனுமனின் உருவம் பொறித்த கேடயத்தையும் விஸ்வநாத நாயக்கருக்கு அளித்து படைவீரர்களுடன் நகர் வளம் வரச் செய்தார். இறுதியாக ஊர்வலம் ராயர் அரண்மனையை அடைந்தது அங்கு விஸ்வநாதருக்கு பால்சோறு பரிமாறப்பட்டது. பிறகு விஸ்வநாத நாயக்கர் மதுரைக்கு சென்று மதுரை மதுரை மாநகர் முழுவதும் வளம் வந்தால் அன்று முதல் 9 தலைமுறையாக கிருஷ்தவ ஆண்டு 1529ல் இருந்து 1726 வரை மதுரையை நாயக்கர் பேரரசு ஆண்டது என்பது குறிப்பிடத்தக்கது.
கொட்டியம் விஸ்வநாத நாயக்கர்:-
![]() |
| விஸ்வநாத நாயகுடு திரைப்படத்தில் விஸ்வநாத நாயக்கராக சூப்பர் ஸ்டார் கிருஷ்ணா |
விஸ்வநாதர் மதுரை வந்தடைந்த போது அவரை அவ்வூர் மக்களும், படைத்தலைவர்களும் மகிழ்ச்சியுடன் வரவேற்றனர். யானை மீதேறி வலம் வந்த விஸ்வநாதர் மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்திற்கு தன் தந்தை நாகமருடன் சென்று இறைவனை வணங்கி ஆசி பெற்றார். நாகமர் தனது மகனை பெருமிதத்துடன் நெற்றியில் முத்தமிட்டார். பின்பு பாண்டியனின் மணிமுடியை சூடி மதுரையின் அரசனாக அரியணை ஏறினார் விஸ்வநாத நாயக்கர். திருச்சியிலும், மதுரையிலும் பெரிய கோட்டைகளை எழுப்பினார். தனக்கு உதவியாக அறிவுக்கூர்மை மிகுந்த அரியநாத முதலியாரை அமைச்சராகவும், தளவாயாகவும் நியமித்து மன்னருக்கு வெற்றிலை மடித்து தரும் உரிமையும் அவருக்கு வழங்கப்பட்டது.
விஸ்வநாதர் தனது ராஜ்ஜியத்தை 72 பாளையங்களாக பிரித்து அதில் பெரும்பாலானவற்றை கம்பளத்தாருக்கும். மற்றவை தெலுங்கு வன்னியர், மறவர் போன்ற சமுக மக்களுக்கு வழங்கினார். தன்னை எதிர்த்து வந்த பஞ்ச பாண்டியர்களை எளிதாக ஒடுக்கினார். மதுரை நாயக்க பேரரசு சிறப்பாக ஆட்சி செய்ய வலுவான அடித்தளம் அமைத்தவர் விஸ்வநாத நாயக்கர் ஆவார்.
![]() |
| பாளையம் வழங்கப்பட்ட முறை |
விஸ்வநாத நாயக்கரின் சிறப்புகள்:-
அவர் வாழ்ந்த காலத்தில் அவர் மிகுந்த அழகுடையவராக இருந்தார். இயக்கையாகவே உடல் வலிமை மிக்கவராகவும், உலக ஞானம் கொண்டும் விளங்கினார். காசி முதல் இராமேஸ்வரம் வரையிலான வழித்தடங்களில் பக்தர்கள் தங்கிச்செல்வதற்காக யாத்திரிகர் சத்திரங்களை அமைத்துத்தந்தார்.
கொட்டியம் குமார கிருஷ்ணப்ப நாயக்கர்:-
இவர் விஸ்வநாத நாயக்கரின் மகன் அரியநாத முதலியார் அரவணைப்பில் தனது தந்தையின் மரணத்திற்கு பிறகு அரியணை ஏறி ஆட்சி செய்தார். தன் தந்தையின் வழியை பின்பற்றி ஆட்சி செய்தார்.
தும்பிச்சி நாயக்கரின் கலகம்:-
இவர் காலத்தில் மதுரை படைகள் விஜநகரத்திற்கு ஆதவாக சென்றிருந்த சமயத்தில். 72 பாளையங்கள் பிறித்து வழங்கப்பட்டதில் மதுரையின் மீது மனக்கசப்பு கொண்டிருந்த பரமக்குடியின் பளையக்காரராகவும் சில்லவார்களின் தலைவராகவும் இருந்த தும்பிச்சி நாயக்கர் மதுரை எதிர்த்து படைத்திரட்டினார். இப்படையில் மறவர் படையும், தும்பிச்சி நாயக்கருக்கு ஆதரவான படையும், சிங்களர் படையும் போர்சுகியர்களின் உதவியோடு. மதுரையின் மீது படையெடுத்தனர். தன் இனத்தவரை தனக்கு எதிராக தூண்டிவிடும் போர்ச்சுகியரின் சூழ்ச்சி என்பதை உணர்ந்த மதுரை மன்னர். கலகத்தை ஒடுக்கினார். கலகத்தில் ஈடுப்பட்ட தும்பிச்சி நாயக்கரின் தலை துண்டிக்கப்பட்டனர். மேலும் பரமக்குடி கோட்டையில் துப்பாக்கியுடன் இருந்த 17 போர்சுகியர்களும் கைது செய்து கொல்லப்பட்டனர். பின்னர் கலகத்தில் பங்கெடுத்த இலங்கை மீதும் படை எடுத்து வெற்றி வாகை சூடினார் மதுரை மன்னர்.
ஒரு நாள் திருநெல்வேலி வழியாக சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது தனது தந்தை மரணம் அடைந்த இடத்தை கண்டார். தந்தை மீது மிகுந்த அன்பு கொண்டிருந்ததால் துயரம் தாளாது தனது 46ம் வயதில் மரணமடைந்தார். இவர் நினைவாக ஆக்ரஹாரம் அல்லது கல்லரை அமைத்து பிராமணர்களுக்கு தானமாக வழங்கப்பட்டது.
கொட்டியம் வீரப்ப நாயக்கர்:-
தனது தந்தை மரணம் அடைந்த போது இளைய பருவம் அடைந்த துடிப்புள்ள இளைஞனாக இருந்தார். மதுரையின் அரியணையில் அமர்ந்து 22 வருடங்கள் ஆட்சி செய்து பின் மரணமடைந்தார்.
கொட்டியம் இரண்டாம் கிருஷ்ணப்ப நாயக்கர்:-
இவர் ஆட்சிக்காலத்தில் சிறப்பான நிகழ்வுகள் எதுவும் பதிவு செய்யப்படவில்லை.
கொட்டியம் முத்துக்கிருஷ்ணப்ப நாயக்கர்:-
இவர் ஆட்சிக்காலத்தில் எதுவும் பதிவு செய்யப்படவில்லை.
கொட்டியம் முத்து வீரப்ப நாயக்கர்:-
முத்து வீரப்ப நாயக்கர் இராமேஸ்வரம்இராமநாதசுவாமி கோவிலுக்கு செல்லும் பக்தர்களிடம் வழிப்பறி செய்து துன்புறுத்தி வந்த கள்ளர்களை ஒடுக்கினார். கள்ளர்களை அடக்க உதவிய மறவர்களுக்கு இராமநாதபுரம் பாளையத்தை வழங்கி கோட்டை கட்டிக்கொள்ள அனுமதி வழங்கினார். மேலும் அவர்களுக்கு "சேதுபதி" என்ற பட்டத்தை வழங்கி சிறப்பித்தார்.
கொட்டியம் திருமலை நாயக்கர்:-
![]() |
| கொட்டியம் திருமலை நாயக்கர் |
மதுரை நாயக்க மன்னர்களில் மிகவும் சிறப்பித்து கூறப்படுபவர் திருமலை நாயக்கர். இவர் 9 பிப்ரவரி 1626ல் தனது தந்தை முத்து வீரப்ப நாயக்கருக்கு பிறகு மதுரை மீனாட்சி அம்மனிடம் ஆசி பெற்று அறியணை ஏறினார். இவர் இசை மீதும் நாட்டியம் மீதும் அதீத காதல் கொண்ட கலா ரசிகர். நல்லிரவு வரை கூட இசை,நடனம் முதலிய நிகழ்வுகளை காண்பார். அவர் எப்போது வெற்றிலை போடுகிறாறோ அப்போது தான் சபை கலையும்.
தஞ்சை நாயக்கர்களுடனான கொடுப்பினை:-
திருமலை நாயக்கர் அரியணை ஏறிய மறுநாள் காலை தஞ்சை நாயக்க அரசர் விஜய ரகுநாத நாயக்கரின் தூதுவன் திருமலை மன்னரிடம் ஒப்பந்தம் செய்ய தூது வந்தான் அதன் படி திருமலை மன்னருக்கு வல்லம் கோட்டையை வழங்குவதாகவும் அதற்கு பிரதிபலனாக திருச்சியை தஞ்சை அரசிற்கு வழங்கவேண்டும். மேலும் ரகுநாத நாயக்கரின் தங்கையான பார்வதியை திருமலை நாயக்கருக்கு மணம் முடித்து தருவதாகவும் தஞ்சை மற்றும் மதுரை மன்னர்களுக்கிடையே ஆன ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
திருமலை நாயக்கர் தஞ்சை இளவரசியின் திருமணம்:-
மதுரையில் கோலாகலமாக திருமலை மன்னரின் திருமண விழா ஏற்பாடு செய்யப்பட்டது. மதுரையின் தெருக்கள் எங்கும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டது. இராஜ அலங்காரத்துடன் திருமலை நாயக்கர்மணமேடையில் வீற்றிருந்தார். அழகிய இளவரசி பார்வதியை தஞ்சை மன்னரின் உறவினர்கள் திருமலை மன்னரின் அருகில் அழைத்து வந்தனர். அன்று சொக்கநாதனுக்கு மினாட்சியை திருமால் மணம்முடித்து கொடுத்து போல தங்கயின் கைபிடித்து திருமலை மன்னரின் கையில் சேர்த்தார். வேத விற்பணர்களின் மந்திரங்கள் முழங்க இளவரசி பார்வதி திருமலை நாயக்கரின் மனைவி ஆனார். மதுரையில் கதிரவன் மறைந்து இருள் கவ்வ நினைத்தாலும் மதுரையில் வீதி எங்கும் ஒளிரவிடப்பட்ட விளக்குகள் இருளை தகர்த்தன. அந்த விளக்கொளியில் திருமலை நாயக்கரும் அரசியும் யானை மீது அமர்ந்து நகர் வளம் வந்தனர். தெருவெங்கும் மக்கள் ஆரவாரம் செய்தனர். வாழ்த்து கோஷம் விண்ணை பிளந்து தேவலோகம் வரை சென்றது. தம்பதிகள் அரண்மனை திரும்பியதும் தஞ்சை நாயக்கர்கள் சார்பில் பெரும் சீர்வரிசைகள் சீதனமாக கொடுக்கப்பட்டது.
அரியநாத முதலியார் இறப்பு:-
திருமலை நாயக்கரின் திருமணம் முடிந்த மூன்றாம் நாள். திருமலை நாயக்கரின் காதுகளில் ஒரு துயர செய்தி எட்டியது. அது மதுரையின் தலைமை அமைச்சர் மற்றும் தாளவாயாகவும் விஸ்வநாத நாயக்கர் காலம் முதல் மதுரை மன்னர்களை வழிநடத்தியவருமான அரியநாத முதலியார் இறந்துவிட்டார் என்ற செய்தி. திருமலை நாயக்கர் ஆணையின்படி மிகுந்த அரச மரியாதைகளோடு இறப்பு சடங்குகள் செய்து அரியநாதர் உடல் அடக்கம் செய்யப்பட்டது. புதிய அமைச்சராக பொறுப்பேற்ற விடியப்பாவிற்கு அரியநாதரின் வலது கைவிரல் மோதிரத்தையும். தளவாயாக பொறுப்பேற்ற ராமபையனுக்கு அரியநாதரின் இடது கைவிரல் மோதிரத்தையும் எடுத்து திருமலை நாயக்கர் அணிவித்து அவர்களுக்கு பணி நியமனம் வழங்கினார்.
மதுரையின் படை மற்றும் பொருளாதாரம்:-
புதிதாக நியமிக்கப்பட்ட தளவாய் மற்றும் தலைமை அமைச்சர் இணைந்து பணியாற்றி மதுரை அரசின் படை வலிமை மற்றும் வருவாய்களை கணக்கெடுத்தனர். அதன்படி மதுரையில் நான்காயிரம் குதிரைப்படை, மற்றும் மற்றும் யானை படைகளும் 72 பாளையக்காரர்கள் கட்டுப்பாட்டில் 60,000 காலாட்படை வீரர்களும் இருந்தனர். இதை ஒழுங்குப்படுத்தி மதுரை கோட்டைக்கு வெளியில் குதிரை படைகள் மற்றும் கோட்டையின் 72 கோபுரங்கள் மீது வீரர்கள் நிறுத்தபட்டன.
மதுரையின் வருவாய் பொருத்தவரை 44 லட்சம் சக்கரங்கள். இதில் நான்கு லட்சத்தை கோவில்கள் சீரமைப்பு, பிராமணர்கள் ஊதியம் மற்றும் ஏழை எளிய மக்களுக்கு உதவ ஒதுக்கப்பட்டது.
மூன்று லட்சத்தை வீரர்களின் ஊதியத்திற்காகவும், ஒரு லட்சம் திருமலை நாயக்கர் செய்யும் தர்மங்களுக்காகவும் மீதம் உள்ள முப்பத்து நான்கு லட்சம் மக்களின் நலத்திட்டத்திற்காக அரசு கஜானாலில் நிரப்பப்பட்டது.
திருமலை நாயக்கர் தனது மாமன் மகள்களை மணந்து கொள்ளுதல்:-
தஞ்சை இளவரசியான பார்வதி நோய்வாய் பட்டு இறந்தார். இதன் காரணமாக திருமலை நாயக்கரின் தாய்வழி மாமன்கள் இருவர் ஒருவருக்கு இரண்டு மகள்கள் மற்றொருவருக்கு ஒரு மகள் என இவர்கள் தங்கள் மகள்களை திருமலை நாயக்கருக்கு திருமணம் செய்து வைத்தனர். திருமணம் முன்ப நடந்ததை போலவே சிறப்பாக நடந்தது.
இராமநாடு சேதுபதிக்கு தண்டனை வழங்குதல்:-
![]() |
| மன்னர் திருமலை சேதுபதி |
இராமநாதபுரம் சேதுபதி இராமநாதபுரம் பாளையத்தை தனி நாடாக பிரகடனம் செய்ய முயன்றார். இதனால் கோபமுற்ற திருமலை மன்னர் தளவாய் இராமபையனை அனுப்பி சேதுபதியை கைது செய்து வர உத்தரவிட்டார். முதலில் சேதுபதி தப்பித்து தலைமறைவானார் பிறகு தனது மருமகன் மூலமாக சில பாளையக்காரர்கள் மற்றும் மைசூரிடம் சென்று மதுரை மீது போர் தொடுக்குமாறு கோரினார். இருப்பினும் ராமபையன் மனம் தளறாது பாளையக்காரர்களையும், மைசூரையும் அடக்கி அவர்களுக்கு 20 லட்சம் பக்கோடாக்கள் அபராதம் விதிக்கப்பட்டது பிறகு சேதுபதியை கைது செய்து மன்னர் முன் நிறுத்தினார். இருப்பினும் சேதுபதியின் மருமகன் நாக தேவதை யாகம் செய்ததன் விளைவாக ராமபையனின் தொடையில் பெரும் வலி ஏற்பட்டது. எனவே ராமபையன் கருட யாகம் செய்ததால் சேதுபதியின் மருமகன் மரணம் அடைந்தார். பிறகு நோயால் ராமபையன் காலமானார். பின்பு திருமலை நாயக்கர் சேதுபதியை மன்னித்து விடுதலை செய்து மீண்டும் இராமநாதபுரத்தை தந்து கௌரவித்தார். இதற்கு விஸ்வாசமாக மூக்கறுப்பு போரில் மைசூரை வீழ்த்த திருமலை நாயக்கருக்கு சேதுபதி உதவினார். எனவே திருமலை நாயக்கர் மதுரையில் விழா வைத்து சேதுபதியை கௌரவித்து அவருக்கு "திருமலை சேதுபதி" என்னும் பட்டத்தை வழங்கி சிறப்பித்தார்.
திருமலை நாயக்கர் மகால்:-
![]() |
| திருமலை நாயக்கர் மகால் |
![]() |
| ஆங்கிலேயரால் வரையப்பட்ட நாயக்கர் மகால் |
![]() |
| மதுரை திருமலை நாயக்கர் மகால் |
மதுரை அரண்மனையும் கோவிலும் அருகருகில் இருப்பதனால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. மேலும் மீனாட்சி அம்மனே மன்னர் கனவில் தோன்றி புதிய அரண்மனை கட்ட உத்தரவிட்டாள்
இதன்காரணமாக கலைநயமிக்க திருமலை நாயக்கர் மகால் மதுரையில் மன்னரால் பல சிற்ப மற்றும் கட்டிடக்கலை கலைஞர்களை கொண்டு மிகப்பிரம்மாண்டமாக கட்டப்பட்டது.
திருமலை நாயக்கரின் குணதிசையங்கள் மற்றும் இறப்பு:-
திருமலை நாயக்கர் கிருஷ்ணரின் வரலாற்று காவியமான பாகவதத்தை விரும்பி படிப்பார். தான் ஒரு விஷ்ணு பக்தர் என்பதில் பெருமிதம் கொண்டவர். பல கோவில்களுக்கு திருப்பணிகள் செய்தான். அனைவரையும் எளிதில் மன்னிக்க கூடியவர். கலைநயம் மிக்கவர். எப்பொழுதும் மகிழ்ச்சியை விரும்புபவர். இப்படி பரிபூரணமாகவாழ்ந்து முகத்தில் ஆனந்தத்துடனே மறைந்தவர் திருமலை நாயக்கர்.
கொட்டியம் இரண்டாம் முத்து வீரப்ப நாயக்கர்:-
இவர் திருமலை நாயக்கரின் மகன் நான்கு மாதங்கள் மட்டுமே ஆட்சி செய்து காலமானார்.
கொட்டியம் சொக்கநாத நாயக்கர்:-
தஞ்சாவூர் மற்றும் மைசூர் மீதான படையெடுப்பு:-
சொக்கநாத நாயக்கர் தஞ்சை நாயக்கரான விஜயரகுநாத நாயக்கரின் பேத்தியான மங்கம்மாளை மணம் புரிய விரும்பினார். ஆனால் அதை தஞ்சை அரசர் மறுக்கவே மதுரை தஞ்சை மீது போர் தொடுத்தது. அதே சமயத்தில் மைசூர் மதுரையை சூழ்ந்தது. இத்தகைய இக்கட்டான நிலையில் சொக்கநாத நாயக்கர் முதலில் தஞ்சையை கைபற்றி மங்கம்மாளை சிறையெடுத்தார். பின்பு தனது தலைநகரை மதுரையில் இருந்து திருச்சிக்கு மாற்றினார். மதுரை நகர் முழுவதும் அடைக்கப்பட்டது மைசூர் வீரர்கள் மதுரையில் வசமாய் சிக்கிக்கொண்டனர். நான்கு மாதங்கள் மதுரையில் அடைக்கப்பட்டிருந்தனர். இறுதியாக மைசூர் படை உணவு நீர் இன்றி வாடினர். பிறகு அவர்கள் ஊர் திரும்பினால் போதும் என்ற நிலையில் மதுரை நகரை சொக்கநாதரிடம் ஒப்படைத்து விட்டு தோல்வியுடன் மைசூர் திரும்பினர்.
சொக்கநாதர் மங்கம்மாள் திருமணம்:-
சிறையெடுக்கப்பட்ட மங்கம்மாளை சொக்கநாதர் திருமணம் செய்து மதுரையின் அரசி ஆக்கினார். ஒருநாள் சொக்கநாதர் உறங்கும்போது படுக்கையில் இருந்து ஒரு ராஜநாகம் வெளிப்பட்டது எனவே அரண்மனை சோதிடர்களை கலந்து ஆலோசித்துவிட்டு தலைநகரை மதுரையில் இருந்து திருச்சிக்கு மாற்றினார்.
கொட்டியம் கிருஷ்ணரங்க முத்து வீரப்ப நாயக்கர் (மங்கம்மாள் கட்டுப்பாட்டில் ஆட்சி):-
சொக்கநாத நாயக்கர் மங்கம்மாளின் மகன் தனது 16வது வயதில் தனது தாயின் கட்டுப்பாட்டில் ஆட்சி செய்தார். தனது இளம் வயதிலேயே பாகவதத்தின்சுலோகங்களை மனப்பாடமாக கூறுவார். மிகுந்த அறிவாற்றல் மிக்கவர். அந்நியகோட்டைகளுக்குள் மாறுவேடத்தில் நுழைந்து தான் வந்ததற்கு அடையாளமாக தனது மோதிரத்தை அங்கே விட்டுச் செல்வது அவரது வழக்கம். டெல்லி முகலாயர் தனது காலணியை அனைத்து ராஜ்ஜயத்திற்கும் அனுப்பி மரியாதை செய்ய கூறுவார் ஆனால் மதுரை நாயக்கர் அந்த காலணி தனது காலில் அணிந்து அவமரியாதைகள் செய்து அனுப்பினார். பிறகு 8வருடங்கள் ஆட்சி செய்து இளம் வயதிலேயே காலமானார்.
கொட்டியம் விஜயரங்க சொக்கநாத நாயக்கர் (மங்கம்மாள் கட்டுப்பாட்டில் ஆட்சி):-
மங்கம்மாள் தனது மகன் இறக்கும் போது அரசியின் வயிற்றில் 8மாத குழந்தையாக இருந்த பேரன் பிறந்ததும் தன் மகனே மீண்டும் பிறந்ததாக எண்ணி மங்கம்மாள் பெரு மகிழ்ச்சி அடைந்து பிராமணர்களுக்கு தங்க, வெள்ளி நாணயங்களை தானமாக வழங்கினார்.
மங்கம்மாளின் குணாதிசையங்கள்:-
![]() |
| இராணி மங்கம்மாள் |
மங்கம்மாள் பெண்ணாக பிறந்தாலும் வீரத்தில் ஆண்களுக்கு சலிக்காத வீர மங்கையாக விவேகம், தாய்மை, வீரம் முதலிய குணாதிசயங்களை ஒருங்கே கொண்டவர். இறைபக்தி மிகுந்தவர் ஆலய திருப்பணிகள், சத்திரங்கள் கட்டுதல், கோவிலுக்கு குளம் வெட்டுதல், அன்னதானம் இடுதல் முதலிய அற காரியங்களை மேற்கொண்டார்.
திருச்சியை கைபற்றிய துருக்கியரை ஒடுக்குதல்:-
எதிர்ப்பாராத விதமாக திருச்சி கோட்டையை துருக்கியர்கள் கைப்பற்ற முனைந்தனர். அப்போது அங்கிருந்து சென்ற தமிழ் பதிவாளர் ஒருவர் மதுரை சென்று நாயக்க படைவீரர்களை அழைத்து வந்து துருக்கியரை மூர்கதனமாக தாக்கி அவர்களது தலைகளை கொய்தனர்.
இராணி மங்கம்மாள் மரணம்:-
விஜயரங்கன் தனது தளவாய் மற்றும் அமைச்சரின் வஞ்சக உரையை கேட்டு தனது பாட்டியான மங்கம்மாளை வீட்டு சிறையில் அடைத்தார். வீட்டு சிறையில் உண்ணா நோன்பிருந்த மங்கம்மாள் 40ம் நாள் தன் உயிர்நீத்தார்.
விஜயரங்கரின் மலபார் படையெடுப்பு:-
மலபார் மன்னர்களை வெற்றி கொண்ட விஜயரங்க நாயக்கர். அவர்களை வரி செலுத்தும்படி செய்தார். பின்பு இராணி மீனாட்சியை திருமணம் செய்தார். தனது இனத்திலேயே மூன்று பெண்களை திருமணம் செய்தார். இருப்பினும் குழந்தை பேரு இல்லாமல் 41 வருடம் ஆட்சி செய்துவிட்டு இறந்துபோனார்.
இராணி மீனாட்சி:-
இராணி மீனாட்சி தனது உயிரிழந்த கணவர் மூலமாக ஆட்சி உரிமையை பெற்ற விதவை அரசி. தங்க கிரிடமும் தங்க வளையலும் அணிந்து அரியணை ஏறினார். இவரை பதவி இறக்க மந்திரிகள் மற்றும் தளவாய்கள் பல சதிகளையும் சூழ்சிகளையும் செய்தனர். இறுதியாக சந்தா சாகிப்தலையிட்டு மதுரை மற்றும் திருச்சியை கைப்பற்றினார். இதனால் இராணி மீனாட்சி மனமுடைந்து தற்கொலை செய்துக்கொண்டார். மதுரை நாயக்க பேரரசு முடிவிற்கு வந்தது.
மதுரை நாயக்கர் பேரரசின் மன்னர்கள்:-

Comments
Post a Comment