நிலக்கோட்டை பாளையம்
நிலக்கோட்டை ஜமீன் வம்சாவழிகள் குறித்த அரசு ஆவணத்தில் இருந்து எளிமைப்படுத்தி எழுதப்பட்டது.
கூளப்ப நாயக்கர் பரம்பரை வரலாறு:-
மதுரை நாயக்க வம்சத்தின் உறவினர்களும், மதுரை ஜில்லா திண்டுக்கல் தாலுகாவை சேர்ந்த நிலக்கோட்டை பளையப்பட்டின் பாளையக்காரர்களுமாகிய கூளப்ப நாயக்கரின் வம்சாவழி விவரம் யாதெனில்:-
முற்காலத்தில் விஜயநகரத்தின் மீது தில்லி பாதுஷ்ஷா படையெடுத்து வந்த போது தனது அரசவையில் மகா ஸ்ரீ இராயர் சிகப்பு வஸ்திரத்தை கொண்டு வந்து வைத்து தனக்கு முன்பிருந்த படை தலைவர்கள் மற்றும் தளபதிகளிடம் உங்களில் யாருக்கு இல்லற வாழ்வில் ஆசையில்லையோ, தன் உயிரின் மீது ஆசையில்லையோ ஆவர்கள் இந்த சிகப்பு வஸ்திரத்தையும் தாம்பூலத்தையும் பெற்றுக்கொண்டு அவர்கள் போர்களம் வேண்டும் என ஆணையிட்டார் அப்போது நிலக்கோட்டை பாளைய வம்சாவழியினரின் முன்னோரான பெஞ்சை வல்லக்கர் கோத்திரத்தில் பிறந்த மாக்கள நாயக்கர் மற்றும் அவர் சார்ந்த படையும் போர்களம் சென்று தில்லி பாதுஷ்ஷாவின் படைகளை துவம்சம் செய்து முறியடித்து விட்டு வெற்றிச் செய்தியும் விஜயநகரம் சென்றனர். இதனால் மிகுந்த மன மகிழ்ச்சி அடைந்த ராயர் மாக்கள நாயக்கரின் படைக்கு வெகுமதிகளாக:-
* வெள்ளை குதிரை
* வெள்ளை சுருட்டி
* வெள்ளை கொடை
* வெள்ளை கறடால்
* வெண் சாமரம்
மற்றும் சிறிது ஆபரணங்கள் மற்றும் வஸ்திரங்களையும் தந்து நீங்கள் திண்டுக்கல்மதுரிபுரிக்கு (மதுரை) மேற்கே நிலையாக கோட்டைக் கட்டி ஆண்டு கொள்ளுங்கள் என கூறி மாக்கள நாயக்கரை மதுரைக்கு அனுப்பிவைத்தார். தனக்கு கொடுக்கப்பட்ட பாளையப் பகுதிக்கு வந்த மாக்கள நாயக்கர் அவ்விடத்தில் ஒரு மண் கோட்டை கட்டினார். மேலும் அவ்வூருக்கு நிலக்கோட்டை என பெயர் சூட்டினார். பிறகு ராயரவர்கள் நிலக்கோட்டையை வளப்படுத்த காடுகளை வெட்டி விளை நிலங்களாகவும், குடியிருப்புகளாகவும் மாற்ற மாக்கள நாயக்கருக்கு பணம் கொடுத்து உதவினார். மேலும் மாக்கள நாயக்கர் கேட்டுக்கொண்டதன் பேரில் வெறும் காடாக புதர் மண்டிக்கிடந்த நிலக்கோட்டைக்கு 10 வருடங்கள் வரி விலக்கு அளித்து உத்தரவிட்டார். உத்தவுக்கு பிறகாக மாக்கள நாயக்கர் காடுகளை திருத்தி செழிப்பான பூமியாக மாற்றி பின் விஜயநகரத்திற்கு 1000 பொன் வரியாக கொடுத்து வந்தார்.
பட்டம் ஆண்ட வாரிசுகள் வரலாறு:-
முதல் பட்டம்:-
நிலக்கோட்டை பாளையத்தின் முதல் பட்டமான மாக்கள நாயக்கர் 12 வருடங்கள் நிலக்கோட்டையை ஆண்டு வந்தார்.
இரண்டாம் பட்டம்:2வது பட்டமாக மாக்கள நாயக்கரின் மகன் கூளப்ப நாயக்கர் பட்டத்திற்கு வந்தார். சிறுவயதில் அரசனானதாலும், கள்ளர்களின் நாட்டில் செய்து வந்த திருட்டு முதலான இடையூறுகளினாலும் அப்போது மதுரையை ஆண்டுக்கொண்டிருந்த பண்டியன் பொறுப்பில் சில காலம் இருந்தார். அச்சமயம் வீர சேகர சோழன் பாண்டியன் மீது படையெடுத்தான். இதனால் விஜயநகரம் சென்ற பாண்டியன் கிருஷ்ண தேவராயரிடம் சென்று உதவி கேட்டார். எனவே ராயர் தனது அரசில் அப்போதை சந்திரகிரியின் ஆளுநராக இருந்த நாகம நாயக்கர் மதுரை பாண்டியனுக்கு மீட்டு தரச்சொல்லி அனுப்பிவைத்தார். பின் கொட்டியம் நாகம நாயக்கர்கலகம் செய்து விஸ்வநாத நாயக்கர் மதுரையின் அரசரானார். பிறகாக நாகம நாயக்கரிடம் கூளப்ப நாயக்கர் கேட்டுக்கொண்டதற்கு இணங்க அப்போதைய மதுரை மன்னரான விஸ்வநாத நாயக்கரும் தளவாய் அரியநாத முதலியாரும் இணைந்து 72 பாளைங்களுக்கு 72 கோட்டைகள் கட்டி அதற்குறிய எழுபத்திரண்டு பாளையக்காரர்களையும் நியமனம் செய்தனர். அவ்வாறு நிலக்கோட்டை பாளையமும் புதிய கோட்டையும் மேலும் புதிய பகுதிகளாக வத்தலகுண்டு, முன்னாடி மங்களம் மற்றும் ஆத்தூர் முதலிய ஊர்களும் கூளப்ப நாயக்கருக்கு வழங்கப்பட்டது.
கைதாத்துக்கோட்டை பஞ்ச பாண்டியர்களுக்கு எதிரான போருக்கு உதவுமாறு விஸ்வநாத நாயக்கர் விடுத்த அழைப்பை ஏற்று கூளப்ப நாயக்கர் போரில் ஈடுபட்டு பஞ்ச பாண்டியர்களை வீீீீழ்த்திவிட்டு மதுரை திரும்பினர். கூளப்ப நாயக்கரின் செயலால் மகிழ்ச்சி அடைந்த விஸ்வநாதர் அவருக்கு பரிசுகள் வழங்கி கௌரவித்தார். இதன்பிறகாக ஒருமுறை விஸ்வநாத நாயக்கர் திருசுரபுரத்திற்கு தன் படைகளுடன் நிலக்கோட்டை வழியாக செல்லும்போது கூளப்ப நாயக்கர் விஸ்வநாதரையும் அவரது படைகளையும் தன் அரண்மனைக்கு அழைத்துச்சென்று விருந்து கொடுத்தும், தன் பாளையத்திற்கு உட்பட்ட கிராமங்களையும், குளங்களையும் சுற்றிக்காண்பித்து அவர்களை உபசரித்தார் இதனால் விஸ்வநாதர் பெரிதும் சந்தோஷப்பட்டு உன்போல் உபசரிப்பவர் யாருமில்லை. நீ செலுத்தும் வரிப்பணம் போதும் என்றும் கூறி மேலும் கூளப்ப நாயக்கருக்கு "ஒன்பதூர் கூளப்ப நாயக்கர்" என்று பெயரும் கொடுத்து மகிழ்ந்தார். இவ்வாறாக தயாள குணம் கூளப்ப நாயக்கர் பல தனது ஆட்சிக்காலத்தில் பல தான தருமங்களை செய்து 22 வருடங்கள் பட்டம் ஆண்டார்.
மூன்றாம் பட்டம்:-
மூன்றாவது பட்டம் பெரிய சுத்தம நாயக்கர் மதுரைக்கு வரிச்செலுத்தி 25 வருடங்கள் பட்டமிருந்தார்.
நான்காம் பட்டம்:-
நான்காவது பட்டம் 2ம் கூளப்ப நாயக்கர் முன்பு போலவே
மதுரைக்கு வரிச்செலுத்தி 30 வருடங்கள் பட்டமிருந்தார்.
ஐந்தாம் பட்டம்:-
ஜந்தாவது பட்டம் பெரிய நாகம நாயக்கர் மதுரைக்கு முறையாக வரிச்செலுத்தி 30 வருடங்கள் பட்டமிருந்தார்.
ஆறாம் பட்டம்:-
ஆறாவது பட்டம் 3ம் கூளப்ப நாயக்கர் மதுரைக்கு வரிச்செலுத்தி 25 வருடங்கள் பட்டமிருந்தார்.
ஏழாம் பட்டம்:-
ஏழாவது பட்டம் சிந்தம நாயக்கர் மதுரைக்கு வரிச்செலுத்தி 30 வருடங்கள் பட்டமிருந்தார்.
எட்டாம் பட்டம்:-
எட்டாவது பட்டம் நாகம நாயக்கர் கோபழ நரசிங்கபெருமாள் கோவிலையும், உபயநாச்சியார் கோவிலையும் கட்டி பிரதிஷ்டை செய்து 25 வருடம் பட்டமிருந்தார்.
ஒன்பதாம் பட்டம்:-
ஒன்பதாவது பட்டம் பெரிய மாக்கள நாயக்கர் திம்மராய பெருமாள் கோவிலை கட்டி பிரதிஷ்டை செய்து கோவிலுக்கு அருகாமையில் மன்னவறாதி குளத்தையும் வெட்டி சிறப்பு செய்தார். 25 ஆண்டுகள் பட்டமிருந்தார்.
பத்தாம் பட்டம்:-
பத்தாவது பட்டம் 4ம் கூளப்ப நாயக்கர் 2000 வரிப்பணம் மதுரைக்கு செலுத்திக்கொண்டு ஆண்டுவந்தார். முத்திலாபுரம் குளத்தை வெட்டினார். அழகர் கோவிலை கட்டி பிரதிஷ்டை செய்து 25 வருடங்கள் பட்டமிருந்தார்.
பதினோராம் பட்டம்:-
பதினோராவது பட்டம் பிட்டு கூளப்ப நாயக்கர் 2000 வரிப்பணம் செலுத்தி 30 வருடங்கள் பட்மிருந்தார்.
பன்னிரெண்டாம் பட்டம்:-
பன்னிரெண்டாவது பட்டம் தண்டு கூளப்ப நாயக்கர் இவர் சீவலசெருகில் நரசிம்மர் கோவிலைக்கட்டி பிரதிஷ்டை செய்து சித்தாபுரம் அக்ரகாரமும், குளமும் கட்டினார். மேலும் ராமபையன் சேதுபதி மீது படையெடுத்தபோது இவரும் உடன் சென்று போரிட்டார் அப்போது சேதுபதி பாம்பனாத்துக்கு சென்று தலைமறைவானார் இருப்பினும் விடாது சென்று சேதுபதியை அணைக்கட்டிப் பிடித்து வந்தார் கூளப்பர் இதனால் அவருக்கு தண்டு கூளப்ப நாயக்கர் என ராமபையர் அவருக்கு பட்டம் கொடுத்தார். இவர் 25 வருடம் பட்டமிருந்தார்.
பதிமூன்றாவது பட்டம் விறலிவிடுதூது கேட்ட நாகம நாயக்கர். நக்கனூத்தில் அக்ரகாரம் கட்டி, குளமும் வெட்டி, நிலக்கோட்டையை கல்கோட்டையாகவும் மேம்படுத்தி கட்டினார். இவர் பட்டமிருந்தது 30 வருடங்கள்.
பதினான்காம் பட்டம்:-
பதினான்காவது பட்டம் கூளப்ப நாயக்கர் இவர் கரியாம்பட்டி குளத்தையும், சீரங்கபாடி குளத்தையும் வெட்டினார். ஈசுவரன் கோவிலை கட்டினார். 25 வருடங்கள் பட்டமிருந்தார்.
பதினைந்தாம் பட்டம்:-
பதினைந்தாவது பட்டம் சிந்தம நாயக்கர்
இவர்காலத்தில் ஐதர் அலி திண்டுக்கல்லை கைப்பற்றினான் பிள்ளையாநத்தம் மற்றும் பித்தாளை பட்டிணத்திற்கு இடாக வரிப்பணம் செலுத்து அப்பகுதியை மீட்டுக்கொள்ளுமாறு நிலக்கோட்டை சிந்தம நாயக்கருக்கு செய்தி அனுப்பினார். எனவே ஐதரின் தலைநகரான ஸ்ரீ ரங்கப்பட்டிணத்திற்கு 5000 வரிபணம் செலுத்தினார் ஆனால் ஐதர் அலி தனது வாக்கு தவறி பிள்ளையாநத்தம் மற்றும் பித்தாளை பட்டிணத்தை சிந்தம நாயக்கருக்கு கொடுக்காமல் தானே எடுத்துக்கொண்டான். இவர் 30 வருடங்கள் பட்டமிருந்தார்.
பதினாறாவது பட்டம்:-
பதினாறாவது பட்டம் கூளப்ப நாயக்கர். இவர் நாளையில் திண்டுக்கல்லுக்கு சையது சாகிப் வந்தார் அவரிடம் 5900 வரிப்பணம் செலுத்தி 15 வருடங்கள் பட்டம் ஆண்டு வந்தார்.
பதினேழாவது பட்டம் கூளப்ப நாயக்கர். ஐதர் அலியிடம் இருந்த திண்டுக்கல் ஆங்கிலேய அரசின் கீழ் சென்றது. அப்போது நிலக்கோட்டையில் கடும் வறட்சி, மழை இல்லாததாலும் கிஸ்தி கட்ட முடியவில்லை. மக்களை துன்புறுத்த ஆரம்பித்தனர் ஆங்கில அதிகாரிகள். இது கூளப்ப நாயக்கர் காதுக்கும் எட்டியது. அந்த அதிகாரியை கொல்ல திட்டம் வகுக்கப்பட்து. மதுரையில் இருந்து குதிரையில் வரி வசூல் செய்ய வந்த அதிகாரி முசுவனூத்து அருகே வெட்டி கொல்லபட்டான். அந்த இடத்திற்கு சட்டைக் காரன் மேடு என்று இன்று அழைக்க படுகிறது. (சட்டைக் காரன் = வெள்ளைக்காரன்) நம் ஆண்களுக்கு அன்று மேல் சட்டை அணியும் பழக்கம் இல்லை) இந்த சம்பவம் ஆங்கிலேயரை கோபம் அடைய செய்தது. மேலும் ஆங்கில அரசு தடை செய்த போர் கருவிகளை கூளப்ப நாயக்கர் வைத்து இருந்ததால் ஆங்கில அரசு நிலக்கோட்டையை பிடிக்க் வந்தது. கூளப்ப நாயக் ஆங்கில அரசுக்கு எதிராக போரை அறிவித்தார் (1797) .அதற்காக 10000 கள்ளர்களை ஆனையூரிலிருந்து (ஆனைமலை கள்ளர்கள்) அழைத்து வந்து அவர்களுடன் இணைந்து ஆங்கிலேயருக்கு எதிராக போர் செய்தார். இந்த போரில் கூளப்ப நாயக் கொரில்லா போர் முறையை பின்பற்றினார். பல முனையிலிருந்தும் ஆங்கில வீரரர்கள் தாக்கப்பட்டார்கள். நிலைகுலைந்த ஆங்கில அரசு அடுத்த நாள் பல வீரர்களை மதுரையிலிருந்து வரவழைத்தது. மீண்டும் ஒரு வாரம் கழித்து கலெக்டர் தலைமையில் ஒரு படை வந்தது. கலெக்டருக்கு யரோ ஒருவன் கோட்டையின் வரைபடம் கொடுத்ததன் காரணமாக ஆங்கியேரின் பலம் ஓங்கியது. இறுதியில் ஆங்கிலேயர் வெற்றி பெற்றனர். கூளப்ப நாயக் தப்பி ஓடிவிட்டார்.
ஆங்கில அரசு கூளப்ப நாயக்கரை பிடித்து தருவோர்க்கு 1000 வராகன் பொன்னும், பிள்ளைகள் மனைவியை பிடித்து தருவோர்க்கு 500 வராகன் பொன்னும் என அறிவித்தது. மூன்று வருடங்களாக அவரை பிடிக்க் முடியவில்லை. அதனால் ஆங்கில அரசு கூளப்ப நாயக்கர் மனைவி மக்கள் பிடிபட்டனர் என்ற பொய்யான தகவலை பறை சாற்றினர். நாயக்கர் காதுக்கும் இது எட்டியது. பதறிப் போனார் நாயக்கர். வேறு வழியின்றி சரணடைய எண்ணி கலை கூத்தாடி வேஷம் போட்டு சென்றார். ஆங்கில அதிகாரிகளில் பிடிக்க பட்டு சிறையில் அடைக்கபட்டு குதிரைக்கு கொள் வைக்கும் வேலை நாயக்கருக்கு கொடுக்கபட்டது. தூக்கில் போட்டால் கிளர்ச்சி செய்வார்கள் என்ற பயமும் மற்றும் அவரின் ஒவீரத்திற்காகவும் அவரை விடுதலை செய்தது. ஆனால் அவருடைய சொத்துகள் அனைத்தையும் ஏலம் விட்டது. அவருடைய சொத்துகளுக்கு எவ்வித சம்மந்தமும் இல்லாத ஆங்கில அரசு அவருடைய சொத்துகளை ஏலம் விட்டது கொடுமையிலும் கொடுமை .
நிலக்கோட்டை ஜமீன் வம்சாவழிகள்:-
1, மாக்கள நாயக்கர் - 12 வருடங்கள் பட்டமிருந்தார்
2, கூளப்ப நாயக்கர் - 25 வருடங்கள் பட்டமிருந்தார்
3, பெரிய சிந்தம நாயக்கர் - 25 வருடங்கள் பட்டமிருந்தார்
4, கூளப்ப நாயக்கர் - 30 வருடங்கள் பட்டமிருந்தார்
5, பெரிய நாகம நாயக்கர் - 30 வருடங்கள் பட்டமிருந்தார்
6, கூளப்ப நாயக்கர் - 25 வருடங்கள் பட்டமிருந்தார்
7, சிந்தம நாயக்கர் - 30 வருடங்கள் பட்டமிருந்தார்
8, நாகம நாயக்கர் - 25 வருடங்கள் பட்டமிருந்தார்
9, பெரிய மாக்கள நாயக்கர் - 35 வருடங்கள்
10, கூளப்ப நாயக்கர் - 25 ஆண்டுகள் பட்டமிருந்தார்
11, பிட்டு கூளப்ப நாயக்கர் - 30 ஆண்டுகள் பட்டமிருந்தார்
12, தண்டு கூளப்ப நாயக்கர் - 25 வருடங்கள் பட்டமிருந்தார்
13, நாகம நாயக்கர் - 30 வருடங்கள் பட்டமிருந்தார்
14, கூளப்ப நாயக்கர் - 25 வருடங்கள் பட்டமிருந்தார்
15, சிந்தம நாயக்கர் - 30 ஆண்டுகள் பட்டமிருந்தார்
16, கூளப்ப நாயக்கர் - 15 ஆண்டுகள் பட்டமிருந்தார்
17, கூளப்ப நாயக்கர் - 27 ஆண்டுகள் பட்டமிருந்தார்
![]() |
| நிலக்கோட்டை அரண்மனை |

| கல்கோட்டை |

Comments
Post a Comment